உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தென்பாண்டிச் சிங்கம்.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தென்பாண்டிச் சிங்கம் 199 போய் விடுமல்லவா? அதனால்தான் நான் திருமணமே செய்து கொள்வதில்லையென்று சூளுரை மேற்கொண் டுள்ளேன். அதனால் இனியொரு முறை அந்தப் பேச்சைத் தொடங்காதே!' திருவிழாவின்போது பட்ட முளைப்பாரித் மங்கலத்துப் பிள்ளையார் முன்னால், தன்னைப் பற்றித் தனது அண்ணன் கொண்டிருந்த பாசம் வெளிப்பட்டதே! அதை இப்போது வைரமுத்தன் நினைத்துக் கொண்டான்! அந்த நினைவு அவன் நெஞ்சைப் பிழிந்தது! பிழியப்பட்ட அந்தச் சாறுதான் கண்ணீராக ஊற்றிக் கொண்டிருந்தது. பாகனேரி வாளுக்குவேலியின் சாரட்டு வண்டி பட்டமங்கலம் எல்லைக்கு வந்துவிட்டது என்ற செய்தியை ஒரு காவலன் கொண்டு வந்தான். எல்லா நாட்டு அம்பலக்காரர்களும் வல்லத் தரையனுக்கு மாலை மரியாதைகளுடன் வந்து தங்களின் இறுதி அஞ்சலியைச் செலுத்திக் கொண்டிருந்தனர். பட்டமங்கலத்திற்கு வாளுக்குவேலியின் சாரட்டு வண்டி வந்து விட்டது என்றதும், உறங்காப்புலி ஆவேசம் கொண்டவனைப் போல ஆடினான்! உடைவாளை உருவி னான்! பிறகு உறையில் போட்டான்! ஈட்டியை எடுத்தான்! தரையில் ஓங்கிக் குத்தினான். வாளுக்கு வேலியின் வண்டியைக் கண்ட பட்ட மங்கலத்து மக்கள்; தெருவில் கும்பல் கும்பலாகச் சோக முகத்துடன் கூடியிருந்தோர் அந்த வண்டியைப் பின் தொடர்ந்து ஓடிவந்து கொண்டிருந்தார்கள். பட்டமங்கலத்து மாளிகையில் வாளுக்குவேலியின் வருகையால் என்ன நடக்கப் போகிறதோ என்ற எதிர் பார்ப்பு அவர்களை மிகுந்த பரபரப்புக்குள்ளாக்கியிருந்தது.