உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தென்பாண்டிச் சிங்கம்.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தென்பாண்டிச் சிங்கம் 205 அன்றைக்கிருந்த உற்சாகத்தில், வடிவாம்பாள் கற்றுத் தந்த நாட்டியங்கள் அனைத்தையும் ஆடிவிட வேண்டும் போல் தோன்றியது. சொல்லி வைத்தாற் போல் மாளிகைக் கூடத்தில் வடிவாம்பாளும், நாதமுனி, லலிதாங்கி ஆகியோரும் தயாராக இருந்தார்கள். நினைத்ததெல்லாம் நடக்கிறதே என்று அவள் கும்மாளம் போட்டுக் கொண்டு சில விநாடிகளுக்குள்ளாக நடன உடையுடன் வடிவுக்கு நேராக வந்து நின்றாள். வடிவாம்பாளின் முகமும் வழக்கத்திற்கு மாறாக அன்றைக்கு மிகவும் பிரகாசமாக இருந்தது. வேறொன்று மில்லை! நடனப் பயிற்சி தருவதற்கு அவள் வரும் போதெல்லாம் பாகனேரி மாளிகையில் காண முடியாத வாளுக்குவேலி அன்றைக்கு மாளிகையில் தங்கியிருப்பது தான் வடிவுக்கு ஏற்பட்ட புதிய பொலிவுக்குக் காரணம்! அது மட்டுமா? வடிவு மேலும் புல்லரித்துப் போய்விடுகிற அளவுக்கு நடனப் பயிற்சிக் கூடத்திற்கே வாளுக்குவேலி வந்து அமர்ந்து விட்டான். 'கடவுள் அருளால் காரியம் கைகூடப் போகிறது. இன்று எனது கலைத்திறன் முழுவதையும் காட்டி அவனை வனைத்துப் போட வேண்டும்! சுந்தரியிடம் சொர்க்கத் தைத்தான் கண்டேன்; இவளிடம் இந்திரலோகத்தையு மல்லவா இணைத்துக் காண்கிறேன் - என்று அதிசயித்துப் "போய் அதிரசவல்லி நீதான்! என்அம்ச தூளிகா மஞ்சத்திற்கு ஏற்ற சொர்ணக்கிளி நீதான்! என்று கூறி என்னருகே சொக்கிக் கிடக்க வேண்டும் -அதற்கேற்றபடி என் கலையை வலையாக்குகிறேன்!" தனக்குள்ளாக முடிவு செய்து கொண்டு சதங்கை கொஞ்சும் பாதங்களைத் தாளத்தோடு தரையில் மேவ விட்டாள்! என்று என்னம்மா வடிவூ! கல்யாணி உன்னைப் போல ஆடுகிற அளவுக்குப் பயிற்சி கொடுத்து முடித்திருப்பாயா?"