உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தென்பாண்டிச் சிங்கம்.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25 வெள்ளை அய்யர், மணமகன்களின் படங்கள் திறமை மிக்க ஒவியர்களால் தீட்டப்பட்டு அளவில் சிறிய தாகவும் மணமகன்களின் முழு உருவமும் அமைந்ததாக வுமிருந்தவைகளை ஒவ்வொன்றாக வாளுக்குவேலி யிடம் காட்டுவதற்கு முனைந்தார். அழகிய அட்டைகளில் அந்தப் படங்கள் வரையப்பட்டிருந்தன. வாளுக்கு வேலியைப் போலவே ஆவலுடன் மேகநாதனும், காடையும், கௌதாரியும் அந்தப் படங்களைப் பார்க்கத் தலையை நீட்டிக் கொண்டிருந்தனர். அப்போது கறுந்த ஆதப்பனும் அங்கு வந்து சேர்ந்தான், "வா, ஆதப்பா வா நல்ல நேரத்தில்தான் வந்திருக்கிறாய்... இவர்களில் யார் நமது கல்யாணிக்குத் தகுந்த கணவன் என்று தேர்ந்தெடுக்க நீயும் இந்தக் குழுவில் சேர்ந்து கொள்! என்றாள் வாளுக்குவேலி. ஆதப்பனும் அய்யர் காட்டப்போகும் படங்களுக் காக அவரை நெருங்கி உட்கார்ந்து கொண்டான். ஒவ்வொரு படமாக அய்யர் எடுத்து விளக்கிடத் தொடக்கம் செய்தார். ன் 'இதோ இவன் எழுகோட்டை நாட்டு அம்பலக் காரரின் மகன்வாட்போர், மற்போரில் வல்லவன்! சாமந்தன் என்பது இவன் பெயர் வாட்கோட்டை நாட்டு