உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தென்பாண்டிச் சிங்கம்.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தென்பாண்டிச் சிங்கம் 217 கௌதாரி ஒவ்வொரு மணமகனின் படமாகக் கல்யாணியிடம் காட்டியபோது, குவித்திருக்கும் முத்துக் களிலே கொற்கை முத்தினைத் தேடுவதுபோல வண்ண மிகு சங்கினங்களுக்கிடையே வலம்புரிச் சங்கினைத் தேடுவது போல அத்தனைப் படங்களுக்கிடையிலே, தன் மனத்தில் அத்தானாக வரித்துக் கொண்டவனின் படத்தைத்தான் அவள் கண்கள் தேடின. "அந்தப் படம் இல்லையா?" கல்யாணி கௌதாரியிடம் கேட்டே விட்டாள்! கௌதாரி தயங்கினாள்; ஆனாலும் சேலைத் தலைப்பில் மறைத்து வைத்திருந்த அந்தக் கிழிக்கப்பட்ட படத்தின் துண்டுகளைக் கல்யாணியிடம் கை நடுக்கத் துடன் கொடுத்தாள். கிழிந்த பகுதிகளை இணைத்து வைத்துப் பார்த்த நாச்சியாரின் விழி நீர், ஆடிப் பெருக்கில் ஆற்றுவெள்ளமென இமை புரண்டு வழிந்தோடியது. "என்னம்மா முடிவு செய்தாய்?" என்று ஆவல் ததும்பிடக் கேட்டுக் கொண்டே வாளுக்குவேலி அங்கு வந்து சேர்ந்தான். தொடர்ந்து வந்த கறுத்த ஆதப்பனும் வெள்ளை அய்யரும் சற்றுத் தொலைவிலேயே நின்றனர். அண்ணன் குரலைக் கேட்டதும் கல்யாணி எல்லாப் படங்களையும் ஒன்றாக அடுக்கிக் கொண்டு அவனைத் திரும்பிப் பார்த்தாள்! தங்கை அழுது கொண்டிருக்கிறாள் வாளுக்குவேலியின் இருதயத்தில் இரத்தம் கசிந்தது! 'கல்யாணி! என்ன இது? ஏன் அழுகிறாய்?" அவளுக்கு எங்கிருந்துதான் அந்தத் தைரியம் வந்தது? அண்ணனை எதிர்த்துக் கடுமையாக ஒரு சொல் பேசி அறியாதவள்; அழுதபடியே கேட்டாள்-ஆனால் அழுத்தம் திருத்தமாகக் கேட்டாள்/