உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தென்பாண்டிச் சிங்கம்.pdf/298

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தென்பாண்டிச் சிங்கம் 277 வாய் தைச் சொல்லி. வைரமுத்தன் மூடுவதற்குள், "புலியை வீழ்த்திவிட்டார்கள்!" என்று கூறிக் கொண்டே வெள்ளை அய்யர் வேகமாக உள்ளே நுழைந்தார். அப்போது மேலேயுள்ள தனது அறையிலிருந்து படிக்கட்டுகளின் வழியாகக் கல்யாணி நாச்சியார் இறங்கிக் கொண்டிருந்தாள். "புலியை வீழ்த்தி விட்டார்கள்!" என்று வெள்ளை அய்யர் சொன்னதை அவளும் கேட்டு விட்டுத் திகைத்து நின்றாள் படிகளிலேயே! “என்ன சாமி” என்று வீரம்மாள் வெள்ளை அய்யரிடம் ஆவலுடன் வினவினாள். 'கர்னல் அக்னியூ கறுத்த ஆதப்பனைக் கைது செய்து விட்டான்." அய்யர் சொல்லி முடிப்பதற்குள் "அண்ணா!"" என்ற அலறல்! கல்யாணி படிகளில் உருண்டு மயக்கமுற்றான். வீரம்மாள் 'கல்யாணி! கல்யாணி!" என்று அழைத்தவாறு ஓடி அவளைத் தூக்கி மடியில் சாய்த்துக் கொண்டாள். வைரமுத்தன் பரபரப்புடன் அங்கிருந்த ஜாடியில் உள்ள தண்ணீரைக் கிண்ணத்தில் ஊற்றிக் கொண்டு வந்து கல்யாணியின் முகத்தில் தெளித்தான். சிறிது நேரத்தில் கல்யாணி மெதுவாகக் கண் திறந்து பார்த்தாள். அவளருகே, பதட்டத்துடன் வைரமுத்தன் உட்கார்ந்திருப்பதை அவளால் நம்ப முடியவில்லை. தனது கையை அவன் பக்கம் 'நீட்டியவாறு கண் கலங்கிட "அத்தான்!" என்றாள். அவனும் "கல்யாணி! என்ன வேண்டும்?" என்று நாத் தழுதழுத்திட வினவினான்... "என் சின்ன அண்ணா.. சின்ன அண்ணா..."