உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தென்பாண்டிச் சிங்கம்.pdf/308

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 33 வைரமுத்தன், கறுத்த ஆதப்பன் குதிரைகளைத் தொடர்ந்து பட்டமங்கலத்து வீரர்களின் குதிரைகள், பறக்கும் அரண்களைப் போலப் பாதுகாப் பாக வந்து கொண்டிருந்தன. எதிர்ப்பு எதுவுமே காட்டாமல் உடனடியாக ஆதப்பனை அக்னியூ துரை விடுதலை செய்தது ரைவமுத்தனுக்கும் ஆதப்பனுக்கும் ஏதோ ஒரு சந்தேகத்தை ஏற்படுத்தாமல் இல்லை. அதனால்தான் அவர்கள் எச்சரிக்கையுடன் தங்கள் பயணத்தை நடத்திக் கொண்டிருந்தார்கள். ஒருவேளை, தன்மீது குறையில்லை என்பதுபோல அவனை விடுதலை செய்துவிட்டு வழியில் சோழபுரம் உடையத் தேவரின் படை வீரர்களை அனுப்பித் தாக்கிடச் செய்ய அந்தக் கர்னல் இப்படியொரு தந்திரத்தைக் கையாண்டிருக்கக் கூடுமோ என்ற கேள்வியும் அந்த இரு வாலிப வீரர்களின் இதயத்தில் எழுந்தது. சிவகெங்கை மன்னர் பதவிக்காக உடையத் தேவர் எதையும் செய்வார். அவரைப் போன்ற சிலர் பதவியும் பவிசும் பெரிதென்று கருதித்தானே தங்களின் தமிழ் இனத்தையே அந்நியர்க்குக் காட்டிக் கொடுக்கத் தயாராக இருந்தனர்!