உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தென்பாண்டிச் சிங்கம்.pdf/310

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தென்பாண்டிச் சிங்கம் 289 தங்களுடன் பாதுகாப்பாக வரும் வீரர்களைவிடப் பல மடங்கு அதிகமாக வீரர்கள் வருகிறார்கள் தங்களை எதிர்நோக்கி என்பதை அவர்கள் புரிந்து கொண்டார்கள். முன்னால் சென்று கொண்டிருந்த வீரனிடம் தனது குதிரையைச் செலுத்தி அவன் கையிலிருந்த தீப்பந்தத்தை வைரமுத்தன் வாங்கிக் கொண்டான். "எல்லோரும் என்னைப் பின்பற்றுங்கள்! என்று உரக்க ஒலியெழுப்பிக் கொண்டே, சென்று கொண்டிருந்த நேரான பாதை யிலிருந்து, குறுக்கே ஒரு வறண்ட கண்மாயின் வழியாகத் தனது குதிரையைத் திருப்பினான். ஆதப்பன் உட்பட அனைவரும் அவனைத் தொடர்ந்து கண்மாய் வழியில் பாய்ந்தனர். எதிரே ஒலியெழுப்பிக் கொண்டு வந்த அந்தக் குதிரைப் படையும் கண்மாய் வழியில் நுழைந்து பட்டமங்கலத்து வீரர்களைச் சூழ்ந்து கொண்டது. இவர்கள் பதினைந்து பேர்! வீரத்தோடு எதிர்த்து விழுப்புண் பெற்று மாள்வதேயொழிய வேறு மார்க்கமில்லையென்ற திட உள்ளத்தோடு வைரமுத்தன் தனது குதிரையை இழுத்துப் பிடித்து நிறுத்தினான்! தீப்பந்தத்தை உயரப் பிடித்தவாறு அவன் அனல் தெறிக்கப் பேசினான். யார் நீங்கள்? ஆங்கிலப் படையினரா? அல்லது அவர்களின் அடி வருடும் சேவகர்களா? அல்லது வழிப்பறிக் கூட்டமா?" வைரமுத்தனின் குரலைத் தொடர்ந்து ஒருகணம் மௌனம் நிலவியது! ஆனால் அது நீடிக்கவில்லை! அதே கேள்வியைத்தான் நானும் கேட்கிறேன்! நீங்கள் யார்? ஆங்கிலேயர்களா? அடி வருடிகளா? உம்! சொல்லுங்கள்! வெள்ளையர்களா? அல்லது உள்ளூர்க் கொள்ளையர்களா?" எதிர்க்குரல் எழுந்ததும் வைரமுத்தன் திடுக்கிட்டான்! எங்கேயோ கேட்ட குரல்! அவன் திகைப்பு