உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தென்பாண்டிச் சிங்கம்.pdf/320

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தென்பாண்டிச் சிங்கம் 299 'அழாதே கல்யாணி! பள்ளியறையில் முதல் ரவுக்காக நீ நுழைந்தபோது, என் தம்பி-உன் கணவன் வைரமுத்தன், பாகனேரிக்காரர்களைப் பழி வாங்குவதற் காகவே உன்னைத் திருமணம் செய்து கொண்டிருப்பதாக உனக்கு உணர்த்தி விட்டான்..." வீரம்மாள் பேசப் பேசக் கல்யாணி விக்கி விக்கி அழுதாள். அவளை அரவணைத்துக் கொண்டு வீரம்மாள் தொடர்ந்தாள். "மகிழ்ச்சியின் எல்லையைக் காண வேண்டிய மஞ்சம்! அங்கே மயக்க மருந்து கொடுத்து உன்னைத் தள்ளாட வைத்தான்! நீ காண வேண்டும். கண்டு துடிக்க வேண்டும்-நீ மட்டுமல்ல; செய்தி அறிந்து பாகனேரியில் உன் அண்ணன்களும் பதறிட வேண்டும். என்பதற்காகவே நடனக்காரி வடிவாம்பாளிடம் நாகரீகமற்ற முறையில் நடந்து கொண்டான்..." கல்யாணி திடுக்கிட்டுக் குறுக்கிட்டாள்| "அப்படி யானால் வடிவாம்பாளிடம் அவர் நடந்து கொண்டது என்னைத் துன்பப்படுத்த நடத்திய நாடகம்தானா?" வீரம்மாள் சிரித்துக் கொண்டே "ஓ! உனக்கு அதிலே ஒரு ஆறுதலா? என்று கேட்டுவிட்டு அந்த அறையைச் சுற்றுமுற்றும் பார்த்தாள். முன்புறத்துக் கதவின் ஓரத்திலிருந்து ஏதோ ஒரு உருவம் அசைந்தது! அதைக் கவனித்தும் கவனிக்காததுபோல வீரம்மாள் கல்யாணியின் தலையைத் தன் தோள்மீது சாத்திக் கொண்டு "உன் அண்ணனிடம் மறைத்தது சரி! என்னிடம் இதை யெல்லாம் மறைக்கலாமா?" என்று அன்பு ததும்பக் குழைந்தாள். 'அண்ணீ! தயவு செய்து இந்த இரகசியங்களை வேறு யாரிடமும் சொல்லி விடாதீர்கள்! உங்கள் காலைப் பிடிக்கிறேன். என் அண்ணன் ஆதப்பனுக்குத் தெரிந்தால், உடனே பெரிய அண்ணனுக்குத் தெரிந்துவிடும்! பிறகு தீராத ஆபத்து வந்துவிடும் அண்ணி!"