உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தென்பாண்டிச் சிங்கம்.pdf/326

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தென்பாண்டிச் சிங்கம் 305 கட்டி ஓட்ட வேண்டும்! வல்லத்தரையரைப் போல வாளுக்குவேலியின் தலைமுடியை வெட்டியெறிந்து அவமானப்படுத்த. வேண்டும்-அதுதானே உங்கள் திட்டம்?" ஏன், அதுபோலத் திட்டம் தீட்டக் கூடாதா! மானபங்கப்படுத்தப்பட்டவர் என்னை மணந்த மணவாளர். அது மட்டுமா? அடலேறாம் எனது ஆருயிர் அண்ணனைச் சாக்காட்டில் வீழ்த்துகிற அளவுக்கு, அவமானச் சகதியில் வீழ்த்தினீர்களே! அதையெல்லாம் மறக்குமா இந்த நெஞ்சம்?" கறுத்த ஆதப்பனின் நரம்புகள் புடைத்தன... கண்கள் தீப்பிழம்புகளாயின. சிறுத்தையைப் போல உறுமினான். வேகமாகப் பேசிக் கொண்டிருந்த வீரம்மாள், குரலைச் சிறிது தாழ்த்தினாள். 'இருந்தாலும் ஆதப்பா-கால ஓட்டத்தில் அந்த நிகழ்ச்சிகளை மறந்து பட்டமங்கலமும் பாகனேரியும் பகையற்று வாழ வேண்டுமென்றுதான், நான் மனதார விரும்புகிறேன்! அன்று சுரண்டைக் காட்டில் உன் உள்ளத்தில் சுடர்விட்ட சுதந்திரக் கனல் கண்டு நான் பூரித்துப் போனவள். என் கண்ணீருக்கு மதிப்பளித்து என் மானத்தையும், மாங்கல்யத்தையும் காப்பாற்றிய உன் செயலுக்கு நான் என்றென்றும் நன்றி காட்ட வேண்டியவள்! அதனால்தான் உன்னைக் கேட்டுக் கொள்கிறேன்; நீ இன்றிரவே - இப்போதே - இங்கிருந்து புறப்பட்டுப் போய்விடு!" "இல்லை! முடியாது! தன்னைச் சுற்றிலும் புலிகள் இருப்பதாகப் பயந்து கொண்டு வளை தேடி ஓடுகின்ற எலியல்ல ஆதப்பன்! எதுவரினும் சந்திக்கத் துடிக்கின்றன என் தோள்கள்!*