உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தென்பாண்டிச் சிங்கம்.pdf/328

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தென்பாண்டிச் சிங்கம் தம்பீ 307 'ஆண்டவன் அருளால் எல்லாம் நன்றாக நடக்கும். "இப்போதே போவதென்றால், கல்யாணியிடம் சொல்லிக் கொண்டு போக வேண்டாமா?" வேண்டாம்! அவள் தடுப்பாள்! நாளைக்குப் போகலாமே. என்ன அவசரம் என்பாள்! பிறகு விபரீதமாகி விடும்! தயவு செய்து இப்போதே புறப்படு." வீரம்மாள் யோசனையை அங்கீகரித்தவனைப் போலத் தலையசைத்து மௌனமாய் நின்றான் ஆதப்பன். ""நீ புறப்படுவதற்கான ஏற்பாடுகளைச் செய்து விட்டு ஆள் மூலம் சொல்லியனுப்புகிறேன்-நீ ஆயத்தமாக இரு" விடை பெற்றுக் கொண்டு வீரம்மாள் புறப்பட்டாள் ஆதப்பனின் பயணத்திற்கான காரியங்களைக் கவனிப்பதற்காக!... கதவு மூடப்படாமல் இருந்தாலும்கூட, மெதுவாகத் தட்டப்படும் ஒலிகேட்டு, கல்யாணி - கால்கள் ஒன்றோடொன்று பின்னிட நடந்து சென்று கதவுகளை முழுமையாகத் திறந்தாள். அவள் யாரை எதிர்பார்த்துக் காத்திருந்தாளோ அவன்தான் வந்து நின்றான். கல்யாணி, அவன் காலில் விழுந்து வணங்கி எழுவதற்குள், வைரமுத்தன் -அவளது அழகிய தோள்களைப் பற்றித் தூக்கினான். கதவு திறந்திருப்பதைப் பற்றிக்கூடக் கவலைப்படாமல் இருவரும் அந்த இடத்திலேயே தழுவிக்கொண்டு நின்றனர். சிறிது நேரம் உலகத்தை மறந்திருந்த வைரமுத்தன், ஒரு கையால் கல்யாணியை அணைத்தவாறு, மற்றொரு கையால் கதவுகளை மூடித் தாழ் போட்டான். அவளை