உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தென்பாண்டிச் சிங்கம்.pdf/349

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

328 கலைஞர் மு. கருணாநிதி அகற்றப்பட்டன. ஆதப்பனின் விலங்குகள் செக்குமரத்தின் நுகத்தடியில் ஒரு மாடு பூட்டப்பட்டது. அடுத்த பக்கத்தில் பூட்டுவதற்காகக் கூரிய வாள், வேல் தாங்கிய வீரர்கள் ஆதப்பனை இழுத்து வந்தார்கள். ஆதப்பன் ஆகாயத்தை வெறித்துப் பார்த்தான். முதல் நாளிரவு வீரம்மாளுடன் நடந்த உரையாடலின் சில பகுதிகள் அவன் கண்முன்னே மேகத்திரையில் எழுதப் பட்டிருந்தன. அதை அவன் நெஞ்சம் உரக்கப் படித்தது. போடவில்லை. ஆதப்பா! உன்னுடைய வீரத்தை நான் குறைத்து ஆனால் கல்யாணியின் வாழ்க்கையை மறந்து விடாதே! இங்கே உனக்கு ஏதாவது ஒரு அவமானம் இழைக்கப்பட்டு விடுமேயானால், அதைக் கல்யாணியினால் தாங்கிக் கொள்ள முடியுமா?" வீரம்மாள் அவனிடம் கூறிய வாசகம் இது!...அது மட்டுமா? இப்போது அவனைச் செக்கு மாட்டுடன் இணைத்துக் கட்டிட ஆணை பிறப்பிக்கிறவன் உறங்காப்புலி! அவனை ஊதிவிடுவது ஆதப்பனுக்குச் சாதாரண காரியம்! ஆனால் நேற்றிரவுகூட வீரம்மாள் உருக்கமாகச் சொன்னாளே; அந்த வார்த்தைகள் அவன் மனத்தை விட்டு மறையவில்லையே! இருந்தாலும் ஆதப்பா-கால ஓட்டத்தில் அந்த நிகழ்ச்சிகளை மறந்து பட்டமங்கலமும் பாகனேரியும் பகையற்று வாழ வேண்டுமென்றுதான், நான் மனதார விரும்புகிறேன். அன்று சுரண்டைக் காட்டில் உன் உள்ளத்தில் சுடர்விட்ட சுதந்திரக் கனல் கண்டு நான் பூரித்துப் போனவள். என் கண்ணீருக்கு மதிப்பளித்து என் கணவரது துரோகத்தை வெளிப்படுத்தாமல் என் மானத்தையும் மாங்கல்யத்தையும் காப்பாற்றிய உன் செயலுக்கு, நான் என்றென்றும் நன்றி காட்ட வேண்டியவள்.