உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தென்பாண்டிச் சிங்கம்.pdf/351

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

330 கலைஞர் மு. கருணாநிதி அதையே ஆயுதமாகப் பயன்படுத்தித் தன்னைச் சூழ்ந்து விட்ட வாள்வீரர்களை ஆதப்பன் எதிர்த்திட்டான். "நிறுத்துங்கள்! நிறுத்துங்கள்! யாரும் ஆதப்பனை நெருங்காதீர்கள்!" என்று அதிகாரக் குரலுடன் குதிரையிலிருந்து வைரமுத்தன் இறங்கியதைக் கண்ட வாள் வீரர்கள் ஒதுங்கி நின்று அவனுக்கு வணக்கம் தெரிவித்தனர். "உறங்காப்புலியாரே! என்ன காரியம் செய்தீர்கள்? யாரைக் கேட்டுச் செய்தீர்கள்?" வைரமுத்தன் பதைத்தான். யாரைக் கேட்க வேண்டும்? கல்யாணியின் காலடியில் சொர்க்கத்தைக் காணும் வைரமுத்த அம்பலக்காரரைக் கேட்க வேண்டுமா? கணவனுக்கு என்ன அவமானம் வந்தால் என்ன என்று கவலை யற்றிருக்கும் கற்புக்கரசி வீரம்மாள் தேவியாரைக் கேட்க வேண்டுமா? இவர்கள் யாரையும் கேட்கத் தேவை யில்லையென்றுதான் மானமுள்ள என் மனச்சாட்சியைக் கேட்டேன். அதன் ஆணையை அமல்படுத்துகிறேன்." இப்படி ஆணவமாகப் பதில் உறங்காப்புலி! அளித்தான் சிறிது நேரம் மெளனமாக நின்ற வைரமுத்தன். ஆதப்பனின் அருகே சென்று "எனக்குத் தெரியாமல் நடந்து விட்டது!" என்று சமாதானம் கூற முயன்றான். "போதும் உங்கள் நாடகம்! பிரமாதமாக நடித்து என்னை ஏமாற்றாதீர்கள்! எல்லோரும் சேர்ந்து செய்கிற சதிதான் இது என்பது எனக்குத் தெரியும்! பட்ட மங்கலத்துக் காளையை விட்டுப் பாகனேரி மக்களைக் கொன்று குவித்தீர்கள். அந்தக் காளையை அடக்கி, அந்தக் காளையை ஏவிவிட்ட உறங்காப்புலிக்கும் பாடம்