உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தென்பாண்டிச் சிங்கம்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 பாகனேரித் தேர் வடத்தைத் தொட்டிழுத்துத் தேரோட்டத்தைத் தொடங்கி வைத்தவுடன் அம்பலக் காரர்கள் அனைவரும் அவரவர் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இடங்களுக்குச் சென்று விட்டனர். அவர்களையெல்லாம் அன்புடன் கவனித்து வண்டிகளில் ஏற்றித் தங்கும் விடுதிகளுக்கு அனுப்புவதில் தானே முன்னின்று கறுத்த ஆதப்பன் தனி அக்கறை எடுத்துக் கொண்டான். பட்டமங்கலத்து வண்டியில் வல்லத்தரையன் ஏறிக் கொண்டதும் வாளுக்குவேலி அருகே சென்று தவறாமல் விருந்துக்கு வந்துவிட வேண்டுமென்று கேட்டுக் கொண்டான். உனக்கும்தான் சொல்லுகிறேன்" என்று வைரமுத்தனை வாளுக்குவேலி தோளில் தட்டிக் கொடுத்த போதுதான் அவன் திடுக்கிட்டுத் தன் விழிகளைக் கல்யாணி நாச்சியாரிடமிருந்து வேகமாகத் திருப்பிக்கொண்டு "சரிங்க! சரிங்காம் வாளுக்கு வேலியிடம் கூறிவிட்டு வல்லத்தரையனுடன் வண்டியில் ஏறிக்கொண்டான். 'வாம்மா போசுலாம்” என்று அண்ணன் அழைத்திட அந்த அழகோவியம் அவன் பின்னால் நகர்ந்தது. பட்டமங்கலம் வண்டியை ஒருமுறை திரும்பிப் பார்க்க வேண்டுமென்ற ஆவல் அவள் உள்ளத்தில் கொடிகட்டிப் பறந்தாலும்கூடத் தனது குடும்பப் பெருமையை எண்ணித் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டாள்.