உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தென்பாண்டிச் சிங்கம்.pdf/382

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தென்பாண்டிச் சிங்கம் 357 'கல்யாணியை உயிரோடு இழப்பதற்குச் சம்மதிக் காததால்தான் நான் உங்களை இழக்கவும். நீங்கள் என்னை இழக்கவும் வேண்டுமென்கிறேன்." ஏதோ ஒரு முடிவுடன் - ஆனால் விளக்கிச் சொல்ல முடியாத முடிவுடன் வெளியே புறப்பட்ட வாளுக்கு வேலியின் முன்னால் சென்று, தயவு செய்து என்னிடம் சொல்லி விட்டுப் போங்களேன்!என்ன முடிவு செய்யப் 'போகிறீர்கள்!"" என்று கதறினாள் சுந்தரி. "என் மனதிற்பட்டதைச் செய்வேன்! மன்னித்து விடு சுந்தரி; இப்போது என்னால் எதுவும் சொல்ல முடியாது! அதாவது எனக்கே சொல்லத் தெரியாது!" வாளுக்குவேலி வாசலில் நிறுத்தப்பட்டிருந்த பெட்டி வண்டியில் போய் ஏறிக் கொண்டான். வண்டிக் காரன் திரும்பிப் பார்த்தான் எந்தப் பக்கம் போவது என்பதற்கு ஆணை கேட்பது போல! "பானேரிக்கு ஓட்டு" என்றான் வாளுக்குவேலி! வண்டி எடுத்த எடுப்பிலேயே பறக்கத் தொடங்கியது. திருக்கோட்டியூர் தேரோடும் வீதிகளைக் கடந்து, வாளுக்குவேலி வண்டி ஊரின் எல்லலக்கு வருவதற்குள், எதிரே பட்டமங்கலத்துப் பெட்டி வண்டி வருவதை வாளுக்குவேலி பார்த்து விட்டான். மின்னலைவி வேகமாகச் சில நினைவுகள் அவன் நெஞ்சில் பளிச்சிட்டன! வண்டியை நிறுத்தச் சொன்னான். நிறுத்தப்பட்ட வண்டியைத் திருக்கோட்டியூருக்கே திருப்பச் சொன்னான். பட்டமங்கலத்து வண்டியை - முந்திக் கொண்டு தனது வண்டி வடிவாம்பாள் வீட்டுக்குப் போய் நிற்க வேண்டுமென்றான். அவன் உத்தரவுப்படி வண்டி திருப்பப்பட்டு வடிவாம்பாள் வீடு நோக்கி விரைந்தது.