உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தென்பாண்டிச் சிங்கம்.pdf/387

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

41 வாழ்க்கையென்பது புள்ளி வைத்துப் போடுகிற கோலமல்ல. அள்ளித் தெளிக்கிற மாவு சிதறிக் கிடப்பதில் தோன்றுகிற சித்திரம்தான்; அதற்கென்று கணக்கு வழக்கு கட்டுப்பாடு எதுவுமே தேவையில்லை. இன்பத்தின் எல்லை எதுவரைக்கும் உண்டோ அதையும் மீறிப் பறந்து செல்கிற வலிமையில்தான் வாழ்க்கையின் முழுமையே இருக்கிறது என்று தனக்குத் தானே ஒரு தத்துவத்தை வகுத்துக் கொண்டவர்களின் வரிசையிலே சிறகடித்துப் பறக்க முனைந்தபோது சிதைந்துவிட்ட ஒவியப் பறவையாகி விட்டாள் வடிவு! ஒரு கோடிக் கனவு கண்டாள் - அதற்குள் ஒரு "கோடித் துணி" தனக்குப் போதுமென்று சொல்வது போல் கால்களை நீட்டிப் படுத்துவிட்டாள். ஒன்று, பத்து, நூறு, ஆயிரம், இலட்சம் என உருண்டோடிய நினைவுகளால் அவள் நெஞ்சத் திரையில் வரையப்பட்ட இன்பலோகச் செயற்கைக் காட்சிகள் இருட்டு மண்டபத்துச் சொத்துக்களாக ஆகிவிட்டன. கண்ணாடி முன்னால் ஆடையுடன் நின்றும் அஃதின்றி நின்றும் அவள் பார்த்துப் பார்த்துப் பூரித்த அங்கங்கள் எல்லாம் அசைவற்றுக் கிடந்தன. கண்ணாடியே எதிர் வந்து நின்றாலும் அதனைக் காண்பதற்கான ஒளியிழந்து விட்டன அவளது காந்தக் கண்கள்! எந்தக் கொம்பிலாவது தாவிடுவேன் என்று தழைத்துக் குலுங்கிய இளங்கொடி, நிலையற்ற நெஞ்சத்தால் இந்தக் கொடிதான் தேவையென்று