உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தென்பாண்டிச் சிங்கம்.pdf/391

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

366 கலைஞர் மு. கருணாநிதி பெண்ணாகவே போய்விட்டாள்! அவரை நீங்கள் கொலைகாரர் என்று கூறி, உங்கள் தங்கை கல்யாணி நாச்சியாரின் மாங்கல்யத்தையும் பறித்து விடாதீர்கள்!! என்று வாளுக்குவேலியின் கால்களைப் பிடித்துக் கொண்டு கெஞ்சினாள். அழுதாள்; புலம்பினாள். "எனக்கு இரக்கம் காட்ட வேண்டுமென்று யாரும் யாரையும் கெஞ்ச வேண்டாம்! என்று வைரமுத்தன் கம்பீரமாகச் சொன்னான். 'ஆகா' வீராதி தி வீரன்! அதனால்தான் ஒரு பெண்ணைக் கொலை செய்துவிட்டு வீரம் பேசுகிறான்!" வாளுக்குவேலி ஆர்த்தெழுந்தான். வைரமுத்தன் வாளுக்கு வேலியை எதிர்க்கத் தயாரானான். "வேண்டாம்! தயவு செய்து போய்விடுங்கள்! உங்களால் என் தங்கை செத்தாள் என்று சத்தியமாக யாரிடமும் சொல்ல மாட்டோம்! திடீர் நெஞ்சு வலி! அதனால் இறந்துவிட்டாள் என்றே ஊராருக்குச் சொல்லுகிறோம். தங்கையை இழந்து தவிக்கும் என் மீது இரக்கம் காட்டியாவது நீங்கள் போகமாட்டீர்களா?" வைரமுத்தனிடம் கண்ணீர் மல்க வேண்டினாள் சுந்தராம்பாள்! நெற்றியை விரலால் அழுத்திக் கொண்டு சிறிது நேரம் நின்றிருந்த வைரமுத்தன். விர்ரென்று அங்கிருந்து கிளம்பினான். பட்டமங்கலத்து வண்டி, வடிவு வீட்டு வாசலை விட்டுப் புறப்பட்டது. கல்யாணி எங்கே தனது கணவனுடன் சமாதா னத்திற்கு இறங்கி வந்துவிடப் போகிறாளோ என்ற அச்சத்தால் அவன் வடிவாம்பாள் வீட்டில் கும்மாளம் போட்டுக் கொண்டிருக்கிறான் என்ற விரிவான கதையைப் பட்டமங்கலம் அரண்மனையில் கட்டி விட்டான் உறங்காப்புலி! ஏ அப்பா' வடிவாம்பாளும் நம்ப அம்பலக் காரரும் தெருவிலே கைகோத்துக் கொண்டு நடந்தே