உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தென்பாண்டிச் சிங்கம்.pdf/393

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

368 கலைஞர் மு. கருணாநிதி முடிவுதான் சரியானது என்பதற்குச் சாட்சியங்களாக அமைந்தன. பட்டமங்கலம் நோக்கி, வைரமுத்தன் வண்டியில் வந்து கொண்டிருந்தான். அவனது கரங்களால் கசக்கி எறியப்பட்ட கன்னி மலர் வடிவாம்பாளின் உருவம் அவன் கண்களை விட்டு மறையவே இல்லை. அவனால் இப்போது சாவதானமாகச் சிந்திப்பதற்கு முடிந்தது. உறங்காப்புலியினால் காரியங்கள் எப்படிக் கெட்டுப் போய் விட்டன என்பதை அவன் எண்ணிப் பார்த்தான். ஆனால் அந்த எண்ணத்தை அழித்து விட்டு, உறங்காப் புலிக்குப் பட்டமங்கலத்தின் மீதுள்ள பற்றும் பாசமும் வைரமுத்தனின் மனக் கண்ணில் விரிந்தன! அவனுக்குத் தெரியாது; பட்டமங்கலத்திற்கு அதிபதியாகிவிட, உறங்காப்புலி அக்னியூ துரையுடன் பேரம் பேசிக் கொண்டிருக்கிற இரகசியம்! பாகனேரிக் குடும்பத்தைப் பழி வாங்க வேண்டுமென்பதில் உறங்காப்புலி குறியாக இருப்பதிலும் தவறவில்லை. அதைப் பொருட்டுத்தாமல் நட்புப் பாராட்டலாம் என்று அக்காளும் அவனும் நினைப்பதிலும் தவறில்லை. தங்களை நம்பி வந்துவிட்ட கல்யாணிக்காக வைர முத்தனும் வீரம்மாளும் எடுத்த முடிவு அது! ஆனால் அந்த முடிவின்படி செயல்பட அந்தக் கல்யாணிதானே தடையாக நின்றுவிட்டாள்! அவள்தான் தனது அண்ணன் ஆதப்பனுக்கு இழைக்கப்பட்ட அவமானத்திற்காக அவசரப்பட்டு ஒரு முடிவுக்கு வந்தாள் என்றாலும் அவளைப் போலவே அவசரப்பட்டு அவனும் உடனடியாக வடிவாம்பாள் வீட்டுக்குச் சீர்வரிசைகளை அனுப்பி வைக்க வேண்டுமா? அதனால் ஏற்பட்ட விபரீதம்: ஏ அப்பா! நினைக்கவே உடல் நடுங்குகிறதே!