உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தென்பாண்டிச் சிங்கம்.pdf/401

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

376 கலைஞர் மு. கருணாநிதி அதுவும் அவன் எங்கிருந்து வந்திருக்கிறான்? கல்யாணியைச் சுற்றி நடைபெற்ற பிரச்சாரத்தின்படி அவன் வடிவோடு கொஞ்சி மகிழ்ந்து, கூடிக் கலந்து, ஜோடிப் புறாக்களாய்ப் பறந்து, அதன் பிறகல்லவா திருக்கோட்டியூரிலிருந்து திரும்பி வந்திருக்கிறான்! அவன்மீது மணக்கின்ற சந்தனத்தில் வடிவின் மேனியில் பூசியிருந்த சந்தனமும் சேர்ந்து மணப்பதாகத்தானே கல்யாணி கற்பனை செய்து கொண்டிருந்தாள்! அவளது கண்டிப்பு நிறைந்ததும் கட்டளையைப் போன்றதுமான அந்த வாசகம். வைரமுத்தனைத் தடுமாற்றமடையச் செய்தது! "பட்டமங்கலத்தைப் பற்றி இழிவாகப் பேசுகிறவர் களும் என் முன்னே நிற்கக் கூடாது!" "அதைத்தான் நானும் சொல்லுகிறேன்; ஒருவர் முன் ஒருவர் நிற்க வேண்டாம்! இப்போதே வெளியே போய் விடுங்கள்! அதுதான் இருவருக்கும் நல்லது!"

  • 'கல்யாணீ! இது என் இடம்/ என் மாளிகை!

வெளியே போகச் சொல்லி உன்னை மட்டுமல்ல; உள்ளைவிடப் பெரிய மகாராணியைக்கூட விரட்டுகின்ற அதிகாரம் உரிமை எல்லாமே எனக்குத்தான் உண்டு!" 'இங்கே என்னை வைத்துக் கொண்டே பழி வாங்கவும் துடிக்க விடவும் திட்டம் போட்டிருக்கிற நீங்கள், என்னை அவ்வளவு சுலபத்தில் வெளியே துரத்தி விடுவீர்களா?" “துரத்தினால் என்ன செய்வாய்?" "துக்கம் தாளாமல் அழுது கொண்டிருப்பேன்; அய்யோ. என்னை மன்னித்து விடுங்கள் - எங்கள் அண்ணன்களை எப்படி வேண்டுமானாலும் அவமானப் படுத்துங்கள். சகித்துக் கொள்கிறேன் -நீங்களும் நாளுக்கொரு நாட்டியக்காரி, வேளைக்கொரு விலைமாது