உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தென்பாண்டிச் சிங்கம்.pdf/408

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தென்பாண்டிச் சிங்கம் 383 ஆண்டுகளுக்கு முன் அவன் பெற்ற ஏமாற்றத்தால் அவனுக்கு விளைந்த ஆத்திரத்தில் பழிவாங்கும் நெஞ்சுடன் திரிந்து கொண்டிருக்கிறான். பட்டமங்கலத்து அம்பலக்காரரின் சம்பந்தியானது மட்டுமல்ல, அங்கே அவன் குடியேறிக் கொண்டு பாகனேரி மீது பகைமூட்டுவதையே தனது தலையாய தொண்டாகக் கொண்டிருக்கிறான். அண்ணனால் அன்றைக்கே அடையாளம் காட்டப்பட்ட அற்பனின் முன்னால் அவள் நின்று கொண்டிருந்தாள். கணவனையும் விரோதித்துக் கொண்டு வெளியேறி விட்டவள்-என் தங்கைக்கு ஒரு தீங்கு என்றால் ஊழித்தீயாக மாறி அந்த உன்மத்தர்களை அழிப்பேன் என்ற அண்ணனுக்கும் செய்தி எட்டாத இடத்தில் அகப்பட்டுக் கொண்டிருக்கிறாள். அதனால் உறங்காப்புலி அச்சமின்றி அடவேறு நடை போட்டுக் கொண்டே அந்தப் பாழ்மண்டபத்தில் அலட்சியமாகப் பார்த்தான். அவனை 'கல்யாணி! ஏன் நிற்கிறாய்! இதோ கட்டிலில் உட்கார்! என்ன செய்வது? உன்னை என் கட்டிலறை மோகினியாகவே காலமெல்லாம் அமர்த்தி உன் பட்டு மேனியைத் தொட்டுத்தொட்டு இரசிக்கத் தாலி கட்டுகிறேன் என்று தவமிருந்து பார்த்தேன் உன் தமையனிடம்! என் தகுதி அவர் தகுதி அளவுக்கு உயர்ந்ததல்ல என்று கூறித் தட்டிக் கழித்து விட்டார். ஆனால் என் தவம் வீணாகவில்லை... தாமதமாகவாவது பக்தர்களுக்கு வரம் கொடுப்பதுதான் ஆண்டவனின் பெருமை! அந்தப் பெருமைக்குரிய பெம்மான் எப்படியோ உன்னை என் கையில் சேர்த்து விட்டார்! இந்தப் பாழடைந்த மண்டபம் உனக்குப் பிடிக்காமல் இருக்கலாம் எனக்கு மட்டும் பிடிக்கிறதா என்ன? பஞ்சவர்ணக் கிளிகள் கொஞ்சி மகிழும் மரங்களுக்குத் தங்கத் தகட்டால் இலைகளும்,