உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தென்பாண்டிச் சிங்கம்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 கலைஞர் மு. கருணாநிதி பட்டமங்கலம் அம்பலக்காரர் குடும்பத்தைப் பற்றி அண்ணன் போட்டு வைத்துள்ள கணக்கு, கல்யாணியைச் சற்று நிலைகுலையத்தான் செய்தது. பழைய மன்னர்கள் பலர் தங்களுக்கும் மற்றொரு நாட்டுக்குமுள்ள பகையைத் தீர்த்துக்கொள்ள அந்த மன்னர் குடும்பங்களுக்குள்ளே பெண் எடுப்பதும் பெண் கொடுப்பதும் போன்ற தந்திரங்களைக் கையாள்வதும் அதனை வரலாற்று ஆசிரியர்கள் ராஜதந்திரம் எனப் போற்றுவதும் அவளது நினைவுக்கு வரத் தவறவில்லை. அதனால் அவள் ஒரு ஆறுதல் பெருமூச்சு விட்டுக் கொண்டாள். எனினும் முழுமையான நிறைவு ஏற்படாத முக வாட்டத்துடன் அண்ணனுடன் அந்த வண்டியில் சென்று கொண்டிருந்தாள். வாளுக்குவேலியோ வல்லத்தரையனின் மனப்போக்குக் குறித்தும், காழ்ப்புணர்ச்சி குறித்தும் தன் மனத்தில் உள்ள கவலைகளை வார்த்தைகளால் வெளிப்படுத்துவதை நிறுத்திக் கொள்வதாயில்லை. கல்யாணி நாச்சியாருக்கு ஒரு சந்தேகம் கூட ஏற்பட்டது. ஒரு வேளை, தேர் வடம் பிடிக்கும் இடத்திலும் கோயில் மண்டபத்திலும் பட்டமங்கலத்து வண்டி புறப்படும் இடத்திலும் தன்னையறியாமல் வைரமுத்தன் மீது தனது நெஞ்சு பாய்ந்தோடிய நிகழ்ச்சியைத் தன் அண்ணனிடம் தனது விழிகளும் முகமும் காட்டிக் கொடுத்து விட்டனவோ என்று கருதினாள். திடுக்கிட்டாள். அதனால்தான் அப்படியொரு எண்ணம் தனக்கிருந்தால் அதை மறந்துவிட வேண்டுமென்பதற்காக அண்ணன், பட்ட மங்கலத்துப் பகையை விவரித்துக் கொண்டு வருகிறாரோ என அஞ்சினாள். யில் "ஏன் அண்ணா! இப்படியொரு கசப்பு இரண்டு அம்பலக்காரக் குடும்பங்களுக்கும் ஏற்பட யாராவது விஷமம் செய்கிறார்களா? விஷவிதை தூவுகிறார்களா?"