உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தென்பாண்டிச் சிங்கம்.pdf/418

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தென்பாண்டிச் சிங்கம் 393 நாடி ஓடவேண்டியதில்லை! பட்டமங்கலமா? பாகனேரியா? யார் வாழ்வது? அல்லது யார் அழிவது? இதுதான் இப்போது எழுந்துள்ள கேள்வி! குடும்ப விளக்குக் குப்பையிலே தூக்கி எறியப்பட்டது.. குலப்பெருமை கூறும் திருமாங்கல்யம் குக்கலின் கழுத்தில் தொங்கவிடப்பட்டது/ இதோ என் கல்யாணியின் தாலி சாட்சியாக உத்தரவிடுகிறேன்...துடித்துக் கொண்டிருக்கும் உன் தோளுக்கு வேலை தருகிறேன்... தொடங்கட்டும். போராட்டம் பட்டமங்கலத்தோடு!... பல்லவ மன்னரின் தளபதி பரஞ்சோதி வாதாபிலிருந்து பிள்ளையார் சிலையைத் தூக்கி வந்தான் பெற்ற வெற்றிக்கு அடையாளமாக! நாம் பெறப் போகிற வெற்றிக்கு அடையாளமாகப் பட்டமங்கலத்துப் பிள்ளையாரைப் பாகனேரிக்குத் தூக்கி வா! உம், படையுடன் புறப்படும் பட்டமங்கலத்து விநாயகருடன் பாகனேரிக்கு வா!.... தம்பீ, இனிப் பொறுத்திட முடியாது என்னால்... பொறுத்ததெல்லாம் போதும்... புறப்படடா என் உடன் பிறப்பே!" எப்போது இப்படியொரு வரத்தை அண்ணன் அருளுவான் என்று காத்திருந்த கறுத்த ஆதப்பன், "இதோ தயார் அண்ணா!" என்று வீரம் பொங்கிடக் கூறிவிட்டுக் குதிரையில் தாவி ஏறினான். தன்னால் தானே ஏதோ விபரீதம் நடக்கப் போகிறது என உணர்ந்த கல்யாணி வாளுக்குவேலியிடம், சோர்ந்த தொனியில், 'அண்ணா... நான் சொல்வதைக் கேளுங்கள்..." என்று 'ஆரம்பித்தாள். கல்யாணி! நீ சும்மாயிரு! வெள்ளம் தலைக்கு மேல்! இனி எவ்வளவு உயரம் போனால் என்ன? வா போகலாம்! எனக்கூறி அவளைத் தனது குதிரையில் தூக்கி உட்கார வைத்துக் கொண்டு பாகனேரியை நோக்கிப் புறப்பட்டான் வாளுக்கு வேலி!