உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தென்பாண்டிச் சிங்கம்.pdf/420

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தென்பாண்டிச் சிங்கம் 395 என்று வாளை உயர்த்திப் பிடித்துக் கொண்டு, வீரம்மாளிடம் சபதம் செய்தான் வைரமுத்தன்! பாதையில் குற்றமனைத்தும் தனது கணவன் உறங்காப்புலியின் மீதுதான் என்பது தெளிவாகத் தெரிந்திருந்தும் வீரம்மாள் தனது கணவன் அவனது விபரீதம் வெற்றியடைய முடியாமல் தடுத்திட முனைந்தாளே தவிர, அவனைக் காட்டிக் கொடுத்துவிடத் துணியவில்லை! அதே நிலைதான் இப்போதும் அவளுக்கு! கல்யாணியைப் பாகனேரிக்கு வைரமுத்தன் துரத்திவிட்டான் என்றாலும் அவள் கழுத்திலே தாலியற்றவளாகக் கண்ணீரும் கம்பலையுமாகச் சென்றிடக் காரணம் உறங்காப்புலியென்று வீரம்மாளுக்குத் தெரியும்! அந்த நிலையில் தனது ஆருயிர்த் தங்கையைக் காணும் எந்த அண்ணனும் இந்த முடிவைத்தான் எடுப்பான் என்பதும் அவளுக்குப் புரியும்! அனைத்தையும் மீறியவண்ணம் பதிபக்தி அவளது நாவை அசைய வொட்டாமல் தடுத்து வைத்திருக்கிறது. எனவேதான் வைரமுத்தன் வஞ்சினம் உரைத்தபோது அவள் மௌனமாக இருந்தாள். ம் பரம்பரைப் பகை - இடையே காதல்-காதல் நிறைவேறுவதற்குள்ளாகப் பட்டமங்கலத்து வல்லத்தரை யனுக்கும் உறங்காப்புலிக்கும் பாகனேரியில் இழைக்கப்பட்ட அவமானம் அதற்குப் பழிவாங்க வீரம்மாளும் அவள் கணவனும் துடித்தபோது அவர்களே வியப்புறும் வண்ணம் கல்யாணியை மணக்க வைரமுத்தன் சம்மதம்- அவளை மணந்து பழிவாங்க வேண்டுமென்று அவன் திட்டம்-அந்தத் திட்டம் தீதானது என உணர்த்திய வீரம்மாளுக்கு வெற்றி-ஆனால் அந்த வெற்றி நீடிக்காமல் உறங்காப்புலியின் சதி-உண்மையைப் புரிந்து கொள்ளாமல் அவசரப்பட்ட கல்யாணி-கல்யாணி காட்டிய வெறுப்பினால் கருத்தழிந்த வைரமுத்தன்