உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தென்பாண்டிச் சிங்கம்.pdf/433

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

408 கலைஞர் மு. கருணாநிதி எதிரொலிக்க வீட்டுக்கொரு வீரர் வேலேந்தியும் வாளேந்தியும் பாகனேரி மாளிகைக்கு முன்னால் அணி வகுத்தனர். அருகாமையில் உள்ள கள்ளர் நாட்டுப் படைகள் எல்லாம் பாகனேரிக்குத் துணையாக வந்து சேர்ந்தன. பட்டமங்கலத்தில் வந்து குவிந்த பல்வேறு நாட்டுக் கள்ளர் படைகளும் பாகனேரி நோக்கி விரைந்து கொண்டிருந்தன. மருது பாண்டியர்களுக்கும் கோபால நாயக்கருக்கும் உதவிடச் சென்று பொது எதிரியான ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட்டுக் கொண்டிருந்த கள்ளர் நாடுகளின் படைகள் பாகனேரி அழைப்பை ஏற்று ஒரு பகுதியும், பட்டமங்கலம் அழைப்பை ஏற்று ஒரு பகுதியும், உடனடியாகத் திரும்பித் தங்களுக்குள் போரிட்டுக் கொண்டு குருதியைக் கொட்டுவதற்கு ஓடோடி வந்து கொண்டிருந்தன. பாகனேரி மாளிகையைச் சுற்றிப் போர்ப்பறை ஓசையும், வீரர்களின் ஆரவாரக் குரலும், இடையிடையே துப்பாக்கிகளின் வேட்டுச் சத்தமும் கேட்கவே சுந்தராம்பாளும், கல்யாணியும் வாளுக்குவேலியின் கால்களைப் பிடித்துக் கொண்டு கண்ணீர் உகுத்தனர். பாகனேரித் தேரில் பரவிய தீயை அணைக்க முடியாத காரணத்தால் அந்தப் பழைய தேரின் ஆணிகள் வெடியொலி போலச் சப்தம் எழுப்பிக்கொண்டு தெறித்துக் கிளம்பின! "இப்போதும் கேட்கிறேன் அண்ணா, இந்த யுத்தம் தேவைதானா?" 'அதைத்தான் நானும் உங்களிடம் கெஞ்சிக் கேட்கிறேன்; நீங்கள் மனது வைத்தால் இப்போது கூடப்