உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தென்பாண்டிச் சிங்கம்.pdf/439

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

414 தனது கலைஞர் மு. கருணாநிதி வேலியும், இளஞ்சிங்கக் குட்டியனைய வைரமுத்தனும் வாள் வீசும் தோரணையை இருபுறத்து வீரர்களும் கூடத் தங்கள் பகைமையை மறத்து விட்டுப் பார்த்துக் களித்தனர். அதற்குள் உறங்காப்புலி வெட்டுண்ட செய்தி வரவே, வைரமுத்தன் திடுக்கிட்டு நின்றான். வாளுக்கு வேலியும் வாளை உறையில் போட்டுக் கொண்டு வைரமுத்தா! அதைப் போயக் கவனி/ பொழுதும் போய் விட்டது! நாளைக்கு நிர்ணயிப்போம் மானங்காக்கும் சீமை பாகனேரியா? பட்டமங்கலமா? என்பதை எனச் சொல்லிவிட்டுக் கானகத்து கல்லையும் முள்ளையும் கரடு முரடான பாதைகளையும் பொருட்படுத்தாமல் சுதந்திரமாக நடப்பதுபோல அந்தப் பொட்டலில் நடந்து சென்றான். எதிரே வந்த ஆதப்பனைப் பார்த்து என்ன தம்பீ! இன்றைக்கு நாம் இருந்த இடத்திலேயே இருக்கிறோம்! எதிரிகளை ஒரு அங்குலம் கூடப் பின்னோக்கித் துரத்தவில்லையே என ஆதங்கமுற்றான். 'நாளை விடியட்டும் அண்ணா! பகைவர்களைப் பட்டமங்கலம் வரையில் கொண்டு போய் விட்டுவிட்டு வைரமுத்தனுக்கும் விலங்கு மாட்டி இழுத்து வருகிறேன்! இன்றைக்குப் போராட்டம் என்னைப் பொறுத்தவரையில் வெற்றிதான் அண்ணா! தங்கை கல்யாணியின் தாலியை எந்தக் கயவன் அறுத்தெறிந்து நாயின் கழுத்தில் கட்டினானோ, அவன் கையைத் துண்டித்துப் போட்டு விட்டேன்! அதோ பாருங்கள்; நாய்க்கு அந்தக் கரம் விருந்தாகிற காட்சியை!" என்று அண்ணனைப் பெருமிதமாக நோக்கினான் ஆதப்பன்/ வாளுக்குவேலி, அவனைக் வாழ்த்துரைத்தான். கட்டித் தழுவி பாகனேரியைச் சுற்றிப் பட்டமங்கலத்துப் பாசறையொன்றில் படையினர் அமைத்திருந்த