உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தென்பாண்டிச் சிங்கம்.pdf/457

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

432 கலைஞர் மு. கருணாநிதி 'எழுதிக்காட்டுகிறாயா?" என்று இறகு பேனாவை எடுத்து அவள் கையிலே கொடுத்து மடலையும் நீட்டினான். வீரம்மாள் அந்த மடலில் எழுதினாள்... "கத்தப்பட்டில் ஆபத்து-அங்குப் போக வேண்டாம்! கள்ளர் நாடுகள் ஒற்றுமையாகுங்கள்; கல்யாணியைக் கைவிட்டு விடாதே! வாழ வை" இவ்வளவும் எழுத வேண்டுமென்று எண்ணித்தான் 'க' என்ற எழுத்தை எழுதினாள். அடுத்த எழுத்துக்கு இறகு பேனாவை அசைப்பதற்குள் வீரம்மாளின் விரல் அசைவு நின்று விட்டது. "அக்கா!" என்று சுத்தினான் வைரமுத்தன்! அவள் தனது பாசமுள்ள தம்பியின் மடியில் மீளாத் துயில் கொண்டு விட்டாள். அவளைத் தூக்கிக் கட்டிலில் படுக்க வைத்து அவளது பாதங்களைத் தொட்டுக் கும்பிட்டான். கை தட்டினான்! மெய்க்காப்பாளர் இருவர் உள்ளே வந்தனர்/ ஆணையிட்டான்/ 'தனித்தனியாக இரு சவப்பெட்டிகளில் இந்த உடல்களை வையுங்கள்! இந்தச் செய்தி நம்மைத் தவிர யாருக்கும் தெரியக்கூடாது! பாகனேரியை வெற்றி கொள்வதை இந்தச் செய்தி பாதித்துவிடும்! நாளை மாலை வெற்றி மாலையுடன் பட்டமங்கலம் திரும்பும் போது நம்முடன் வர வேண்டிய சவப்பெட்டிகள் இவை! பட்டமங்கலம் போய்ச் சேரும் வரையில் உறங்காப்புலியோ அல்லது என் அக்காளோ இறந்து விட்ட செய்தி பரம ரகசியம்! ஜாக்கிரதை! இரவுக்குள் பெட்டிகள் தயாராகட்டும்!" இதைச் சொல்லிவிட்டு அக்காள் வீரம்மாளின் உடலை ஒரு வெள்ளைத் துணியினால் மூடினான். சிறிது நேரம் கூடாரத்திற்குள் அமைதியாக நின்றான்... பிறகு கூடாரத்தை விட்டு வெளியே வந்து