உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தென்பாண்டிச் சிங்கம்.pdf/473

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49 கொதிக்கும் கொப்பரை நீரில் கெண்டை மீன்கள் ரண்டு நீந்துவது போல ஆடிக் காற்று வீசும் போது அகல் விளக்கின் சுடர்கள் இரண்டு ஆடாமல் நகர்வது போல - குருதிவழிப் பொட்டல் போர்க் களத்தில் "குத்து! வெட்டு! கொல்லு!" என்ற பயங்கரக் கூச்சலுக் கிடையிலேயும், குண்டுகள் வெடிக்கும் பேரொலிக் கிடையிலேயும், குதிரைகளும், மனிதர்களும் குற்றுயிரும் தலை உயிருமாகக் கிடக்கும் கோரக் காட்சிகளுக் கிடையிலேயும் கல்யாணியும் சுந்தரியும் எதைப் பற்றியும் கவலை கொள்ளாமல் ஓடிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் பார்வை முழுதும் வாளுக்கு வேலியும் வைரமுத்தனும் வாட்போர் புரியும் இடம் எது என்பதை அறிவதிலேயே ஆர்வம் காட்டியது. கல்யாணிக்கு எழுதிய மடலில் குறிப்பிட்டபடி தனது கடைசி நேரம் வந்துவிட்டதை வைரமுத்தன் உணர்ந்து கொண்டான். வாளுக்கு வேலியின் வாளின் முன்னால் தனது ஆற்றல் எடுபடாது என்பதைப் புரிந்து கொண்டாலும் தனது போர்த்திறம் அத்தனையும் காட்டிட வேண்டுமென்பதில் அந்த வீரன் மிகுந்த அக்கறையோடு இருந்தான். கோடரியை மரத்தின்மீது வீசுவதுபோல, வாளுக்கு வேலி தனது வானைத் தூக்கி வைரமுத்தனின் வாளில் அடித்தபோது வைரமுத்தனின் கையில் அவனது வாளின்