உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தென்பாண்டிச் சிங்கம்.pdf/480

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

451 ஆணவம் தென்பாண்டிச் சிங்கம் அடங்கட்டும்! விடுவிப்போம் பெரிய மருதுவையும் சின்ன மருதுவையும்; வாரீர்! வாரீர்" வாளுக்கு வேலி புரவியில் ஏறி அமர்ந்தான்... "நான்தான் முன்னால் செல்வேன்! எனக்குப் பின்னால் ஒவ்வொரு அணியாக நமது படைகள் வர வேண்டும் என ஆணையிட்டுப் புரவியைத் தட்டி விட்டான். வைரமுத்தன், ஆதப்பன், மேகநாதன் மற்றுமுள்ள படைத் தளபதிகள் வாளுக்குவேலிக்குப் பின்னால் ஐம்பது அடி இடைவெளி விட்டுப் படைகளை அணிவகுத்துப் புறப்பட்டார்கள். சுந்தரியும், கல்யாணியும் யாரிடமும் அனுமதி பெறாமலே பாகனேரிப் பெட்டி வண்டியில் ஏறி அந்தப் படை வரிசையினைத் தொடர்ந்து சென்று கொண்டிருந்தார்கள். எல்லோருடைய நினைவும் திருப்பத்தூர்க் கோட்டை, பெரியமருது, சின்ன மருது, தூக்குத் தண்டனை-இவற்றைச் சுற்றியே அலைந்து கொண்டிருந்தது! எல்லை கடந்து. படைவரிசை பாகனேரி திருப்பத்தூரை நோக்கிப் போகிற வீரமிக்க காட்சியே காட்சி! இடம்! அதோ வந்துவிட்டது "கத்தப்பட்டு" என்னும் அய்யோ? அந்த இடத்தில்தான் வைரமுத்தனைக் கொல்வதற்கு உறங்காப்புலி சதி செய்து படுகுழி வெட்டி வைத்திருக்கிறான். அங்கே ஒரு குழி இருப்பது யாருக்கும் தெரியாமல் இலைகள் பரப்பிவிடப்பட்டு அதன் மீது மண்பத்தை களும் வைத்து மூடப்பட்டிருக்கிறது.