உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தென்பாண்டிச் சிங்கம்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தென்பாண்டிச் சிங்கம் 41 "இதோ வந்துட்டோங்க" சமையல்காரன் காடையும். சமையல்காரி சௌதாரியும் மரியாதையுடன் வந்து வணங்கி நின்று உத்தரவை எதிர்பார்த்தார்கள். 'பட்டமங்கலத்துக்காரர்களுக்கு விருந்து பிரமாதமாக இருக்கணும்! போய் ஏற்பாடுகளைச் செய்யுங்கள்! முயல்கள், மான்கள், கோழிகள், ஆடுகள்.... அவைகளில் எத்தனைப் பக்குவங்கள் உண்டோ அத்தனையும் சிறப்பாக இருக்க வேண்டும்." "ஏன் அண்ணா, நான் சமையலைக் கவனிக்கிறேனே! இன்றைக்குச் 'என்னம்மா இது? அடுக்களைப் பக்கமே இது வரையில் உன் கால் பட்டதே கிடையாதே! இளம் அரும்புகள் போன்ற உன் விரல்கள் எலும்புகளையும் இறைச்சித் துண்டுகளையும் தொட்டாவே வாடி விடுமே 'ஆமண்ணா, என்னை இப்படியே வளர்த்து எதிர் காலத்தில் கடுகளவு கஷ்டத்தைக் கூடச் சந்திக்கிற வலிவில்லாமல் செய்து விடுங்கள்!"" சிணுங்கினாள் கல்யாணி நாச்சியார்! செல்லம் கொஞ்சிப் பேசினான் வாளுக்கு வேலி! பட்டமங்கலத்து அம்பலக்காரர் வகையறாவுக்கு விருந்து என்றதும் கல்யாணியின் மனத்தில் ஏற்பட்ட கிளுகிளுப்பை அவளது அண்ணனால் அறிந்து கொள்ள முடியவில்லைதான்! தேவாலயத்து மண்டபத்திலும், தேரோட்டத்தில் ஏற்பட்ட குலுங்கலிலும், பெட்டி வண்டியில் வழி அனுப்பி வைக்கப்பட்ட போதும் அவள் நாடித் துடிப்புகளுக்கு மிகுந்த வேகத்தை வழங்கிவிட்ட வைரமுத்தனும் விருந்துக்கு வருவான் என்ற அசைக்க