உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தென்பாண்டிச் சிங்கம்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தென்பாண்டிச் சிங்கம் 45 பட்ட "அந்தப் பயங்கரமான அமளிக்குப் மங்கலத்தார் எடுத்த முடிவுதான் காரணமென்று உலகம் கூறாமல் போய்விடுமா?' அண்ணா! இப்படியெல்லாம் நான் கேள்வி மேல் கேள்விகளைக் கேட்டதும் வல்லத்தரைய அம்பலக்காரர் வாய்மூடி மெளனியாகி விட்டார்! எனக்கு ஆதரவாக அங்கே வைரமுத்தனின் குரல் ஒலித்தது! கல்யாணி நாச்சியாரின் முகத்தில் கிழக்குத் திசையின் ஒளி மெல்லக் கிளம்பிற்று! வைரமுத்தனின் வாதங்கள் எனக்குச் சாதகமானவை! நான் வைத்த கருத்துக்களைவிட வலுவானவை. சுறுத்த ஆதப்பன் சொல்வதை அலட்சியப் படுத்திவிடக் கூடாது என்று அழுத்தம் திருத்தமாகச் சொன்னான் வைரமுத்தன்" கல்யாணி நாச்சியாரின் வதனமா? எழு ஞாயிற்றின் வண்ணமா? சற்று நேரத்திற்கு முன்பு இருண்டு கறுத்திருந்த முகம்தானா அது? வைரமுத்தா!' என்றைக்கு உன்னை நான் மீறி நடந்திருக்கிறேன். இருந்தாலும் மூதாதையர் காலத்தி லிருந்து இருந்து வரும் ஏற்றத் தாழ்வுகளைச் சாதாரண மேடு பள்ளங்களாக எண்ணி மண்வெட்டி கொண்டு சமப்படுத்தி விடுவது அவ்வளவு எளிதா?" 'அண்ணா! மண்ணில் ஏற்படும் மேடு பள்ளங்களை ஆற்று வெள்ளம் கூடச் சில சமயங்களில் சமப்படுத்தி விடும்! மனித வர்க்கத்துச் சாதி சமய மேடு பள்ளங்களைச் சமப்படுத்துவதற்கு இரத்த ஆறு பெருக்கெடுக்கும் நிலையை நாம் ஏற்படுத்திவிடக் கூடாதல்லவா?" 'சரி தம்பி வைரமுத்தா! உன் கருத்துப்படி பாகனேரி யார் வீட்டு விருந்துக்குப் போகிறோம்!"