உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தென்பாண்டிச் சிங்கம்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தென்பாண்டிச் சிங்கம் 49 செய்திகள் எல்லாம் இனிக் கட்ட இருக்கிற காதல் கோபுரத்திற்கு அழுத்தமான அடித்தளக் கற்களாகி விட்டிருக்கின்றன, இவளை அறியாமலேயே! அவன் வந்துவிட்டால் அவள் போய்ப் பரிமாறுவதா இன்றைக்கு இல்லையா? என்றைக்குமில்லாமல் அடுக்களை அலுவலுக்குச் சென்றதே அண்ணனுக்கும் மற்றவர்களுக்கும் அதிசயமாக இருக்கும்போது, உணவு பரிமாறவும், கிளம்பிவிட்டால் எல்லோரும் என்ன நினைப்பார்கள்? அது மட்டுமல்ல; பரிமாறும் போது அந்தக் குறும்புக்கார நாணம் என்ன பாடுபடுத்துமோ? குழம்புக்குப் பதிலாக சூப்பும் ரசத்திற்குப் பதிலாக மோரும் ஊற்றிவிட்டால்! சே! சே! மானமே போய்விடும்! அதனால் மரியாதையாக ஒதுங்கியிருந்து அவரது அழகைப் பருகிக் கொண்டிருப்பதுதான் புத்திசாலித்தனம்! என்ன இது கோழைத்தனம்? ஒரு மாவீரனின் தங்கையல்லவா? ஒரு தமிழ்ப் பெண்ணுக்குரிய பண்பாடு காப்பதில் உறுதியாக இருந்து - நானே எல்லோருக்கும் உணவு படைத்தால் என்ன? எல்லோருக்கும் சரி; ஆனால் அவர் முன்னால் சென்று உணவு படைக்கும்போது என் கண்ணுக்கு இலை தெரியுமா? அதிலும் அவரது காந்தக் கண்கள் என் கண்களைக் கெளவி இழுத்து விட்டால் அந்த இடத்திலேயே தடுமாறி விழுந்தாலும் விழுந்து விடுவேன்! அதிருக்கட்டும். நான் இவ்வளவு போராட்டத் திற்கிடையே தத்தளித்துக் கொண்டிருக்கிறேன். இன்னும் அவரைக் காணவில்லையே! ஒருவேளை அவர் பட்டமங்கலம் போய்விட்டாரா? அய்யோ! இதற்காகவா நான் விரலை வெட்டிக் கொண்டேன்! இன்னும் காணவில்லையே! கல்யாணி தவியாய்த் தவித்துக் கொண்டிருந்தாள். 康康