உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தென்பாண்டிச் சிங்கம்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 கலைஞர் மு. கருணாநிதி எந்தப் பிணியும் அவளுக்கில்லை. ஏதோ குழந்தை திடீர்னு உணர்ச்சி வசப்பட்டிருக்கு. அதனாலே மயங்கி விழுந்துட்டுது. அவ்வளவுதான். வல்லத்தரையனுக்கு வெள்ளை அய்யர் சொன்ன பதில் போதுமானது என்றாலும் வாளுக்கு வேலியின் உள்ளம் அமைதியின்றி ஊசலாடியது: "வலிப்பு நோயா? என்று பட்டமங்கலத்து அம்பலக்காரர் கேட்டுவிட்டாரே யென்று நொந்து போனான். எத்தனையோ சங்கடங்களைச் சமாளித்துக் கொள்ளும் அவரது உரமேறிய இதயம் இதையும் தாங்கிக் கொண்டது. மீண்டும் அனைவரும் விருந்துக்கூடத்தில் நுழைந்து அமர்ந்தனர். வைரமுத்தனும் வல்லத்தரையனுக்கு அருகே உட்கார்ந்தான். காடையும், கௌதாரியும் ஓடியாடிப் பரிமாறினர். வெள்ளை அய்யர் முழு முட்டைகள் நாலைந்தை விழுங்கிக் களித்தார். நலிவு முழுதும் நீங்கப்பெற்ற கல்யாணி, தனது அறையின் பலகணிப் பக்கம் இருந்தவாறு உணவுக் கூடத்தில் வைரமுத்தன் சாப்பிடுவதையே உற்று நோக்கிக் கொண்டிருந்தாள்! பழையபடி அந்த நினைவு மேகங்கள் சூழ்ந்து இடியும் மின்னலும் புயலும் வெள்ளமும் தன்னைத் தாக்கிவிடக் கூடாது என்ற பயத்துடன் அவளைக் கட்டுப்படுத்திக் கொண்டு அந்தக் கட்டழகன் உணவருந்தும் காட்சியில் இலயித்திருந்தாள். "சாப்பாடு எப்படியிருக்கிறது? எல்லாம் என் தங்கை கல்யாணியின் கைவண்ணம்! சமையல் செய்த களைப்பிலேதான் கல்யாணிக்கு மயக்கம் கூட வந்து விட்டது!" பாகனேரியின் பாசமிகு கேள்விக்குப் பட்டமங் கலத்தின் விமர்சனம் உடனடியாகக் கிடைத்தது. வல்லத் தரையன் வர்ணிக்கத் தொடங்கினான்... 5