உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தென்பாண்டிச் சிங்கம்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 கலைஞர் மு. கருணாநிதி 'தமயந்தியா! வேண்டாம் வேண்டாம்: காரிகையைக் காரிருளில் கானகத்தில் கைவிட்டுக் கட்டியவன் ஓடிவிடத் திக்குத் தெரியாத காட்டில் தவித்து நின்றாளே தமயந்தி; அந்தப் பெயரே என் தங்கைக்கு வேண்டாம்!” அண்ணனின் கேலியைக் காட்டிலும் அந்தச் சமயத்தில் கல்யாணிக்கு வைரமுத்தனின் பாராட்டுரை தான் கற்கண்டும் தேனும் கலந்து தித்திப்பை வழங்கியது. விருந்து முடிந்து விடை பெற்றுக் கொள்ளும் படலம்! கல்யாணியும் அண்ணன் அருகே வந்து நின்றாள். வல்லத்தரையன் வாளுக்குவேலியைக் கட்டித் தழுவி விடை பெற்றுக் கொண்டான். வைரமுத்தனும் கறுத்த ஆதப்பனும் தழுவிக் கொண்டனர். அப்போது அண்ணன் அருகில் தூணில் மறைந்தவாறு இருந்த கல்யாணியின் கரங்கள் வளையுமறியாமல் தூணைத் தழுவித் தடவிக் காண்டிருந்தன. கல்யாணி-வைரமுத்தன்; நான்கு விழிகளின் சங்கமம்/ இதைத் தொடக்கத்திலேயே தேவாலயத்திலும், தேர்வடம் பிடிக்குமிடத்திலும். வல்லத்தரையன் கவனித்து விட்டதால்தான் “கல்யாணிக்கு வலிப்பு நோய் வருவதுண்டோ?" எனக் கேட்டு வைத்தான். அப்படியாவது வைரமுத்தனின் எண்ணத்தில் மாற்றம் நிகழாதா என்பதுதான் அவன் கணிப்பு! வீரர்கள் ஒருவரையொருவர் வாழ்த்தி விடை பெற்றனர்! விடையளித்தனர்! விழிகள் நான்கும் பிரிய முடியாமற் பிரிந்தன! அடர்ந்த காடு ஒன்றில் அடித்த புயலில் அத்தனை மரங்களும் வீழ்ந்து விட்டது போன்ற ஒரு சூனியம் கல்யாணியின் கண் முன்னே! அதே சமயம் அடுத்து எப்படியும் சந்திப்போம் என்ற ஒரு அசைக்க முடியாத நம்பிக்கை!