உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தென்பாண்டிச் சிங்கம்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தென்பாண்டிச் சிங்கம் 61 அதனால் அந்த ஊரில் அந்தஸ்து படைத்த சில மிட்டா மிராசுகளுக்குச் சமமாக அவளால் அங்கு வாழ முடிந்தது! அவள் தந்தச் சிவை! அவள் தங்கையோ தங்கச் சிலை! மாதத்தில் நாலைந்து நடன நிகழ்ச்சிகளாவது ஆலயத் திருவிழாக்கள் என்றும் திருமணக் கச்சேரி என்றும் பல ஊர்களில் நடந்து கொண்டேயிருக்கும். நிகழ்ச்சிக்கான பக்கவாத்தியக் குழுவில் நட்டுவாங்கம் நாதமுனியும் பின்பாட்டு லலிதாங்கியும் முக்கியமானவர்கள். அனேகமாக அவர்கள் சுந்தரி வீட்டிலும், வடிவு வீட்டிலும் மாறி மாறி வம்பளந்து கொண்டு அங்கேயே உண்டு உறங்கி விடுவார்கள். ஒருவகையில் உறவினர்கள் கூட சுந்தராம்பாளுக்கு! அன்று சுந்தராம்பாள் நீண்ட நேரம் புதியதொரு நடன நிகழ்ச்சிக்கு ஒத்திகை நடத்திக் கொண்டிருந்ததால் மிகவும் களைப்பாக இருந்தாள். வழக்கமாகக் கோயிலுக்குப் போகும் அவள் அன்றைக்கு வடிவையும் லலிதாங்கியையும் அனுப்பி வைத்துவிட்டு வீட்டில் தனியாக இருந்தாள். நட்டுவாங்கம் நாதமுனியோ வடிவு வீட்டுத் தாழ்வாரத்தில் படுத்து மாலை நேரத்திலேயே குறட்டை விட்டுக் கொண்டிருந்தான். தெருக்கதவைத் தாழிட்டுவிட்டுக் குளிக்கலாமென்று சுந்தரி, ஆடைகளைக் களைந்து கொண்டிருந்தாள். கூடத்தில் இருந்த நிலைக்கண்ணாடி அவளது அரையாடி அழகைப் பிரதிபலித்துக் கொண்டிருந்தது. "வெந்நீர் தயாரம்மா!" என்ற வேலைக்காரியின் குரல்கேட்டு, மார்புக்கு மேலும் மேகலைத் தடங்களுக்குக் கீழும் ஓரளவு மறைக்கக் கூடிய மெல்லிய துண்டு ஒன்றைக் கட்டிக்கொண்டு குளியலறைக்குள் நுழைந்தாள் ஆடிய களைப்பெல்லாம் சூடான நீர் போக்கிவிட்டுக் கொண்டிருந்தது.