உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தென்பாண்டிச் சிங்கம்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தென்பாண்டிச் சிங்கம் 75 அப்போதுதான் தெருப் பக்கமிருந்து வீட்டு வேலைக்காரி பரபரப்புடன் ஓடிவந்து "அம்மா! அம்மா! பாகனேரி அம்பலக்காரர் வாளுக்குவேலித் தேவர் நம்ப வீட்டு வழியா எங்கேயோ போறாராம். வேடிக்கை பார்க்க வீதியெல்லாம் ஒரே கூட்டம்... வாங்க! வாங்க!" என்று அலறினாள் ஆனந்தம் பொங்கிட! 'அக்கா போய்ப் பார்க்கலாமா? எனக்கு அவரைப் பார்க்கணும்னு ரொம்ப நாளா ஆசை!" வடிவாம்பாள் வாய் முத்து உதிர்த்தாள்! அவர் பாகனேரிக்கு அரசர், நான் பரது நாட்டியத்துக்கு அரசி! கலைஞானத்திற்கு மிஞ்சியதா அதிகாரமும் அந்தஸ்தும்? சரி சரி! ஒத்திகையைக் கவனிக்கலாம்." சுந்தரி அலட்சியமாகப் பதில் அளித்துவிட்டு ஆட்டத்தில் கவனம் செலுத்தினாள். வடிவாம்பாள் கூடத்தில் ஆடினாள் என்றாலும் அவள் எண்ணமெல்லாம் வாசலிலேயே இருந்தது. சுந்தரியின் அழகில் ஒரு புனிதம் இருக்கும். சுந்தரியின் கண்களில் ஒரு குத்து விளக்கின் ஒளி தெரியும்! வடிவின் விழிகளிலோ மின்னல் வெட்டும்! சுந்தரியின் நடை, உடை, பேச்சு, அசைவு எல்லாவற்றிலும் ஒரு நிதானம் பரதமாடும்! வடிவின் நடையோ குதிரைப்படைதான்! உடையோ உடலைக் காட்ட உதவிடும் ரசம் பூசாத கண்ணாடி! நிதானத்திற்கும் அவளுக்கும் வெகு தூரம்: அதனால்தான் அக்காளின் கண்டிப்பைக்கூடப் புரிந்து கொள்ளாமல் தனது மனத்தை வெளியில் ஓடவிட்டாள்! நாதமுனியின் 'ஐதி தொடர்ந்தது! தக்க தரி கிடத் தக்க... தக்கஜிமி ... தக்கஜிமி.. தாம்.. தரிகிடதக்க