உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தென்பாண்டிச் சிங்கம்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 கலைஞர் மு. கருணாநிதி காரர்களாகிய நீங்கள் எல்லா அம்பலக்காரர்களையும் திரட்டி, மருது சகோதரர்களுக்கு ஆதரவளிப்பதாக அறிவிக்க வேண்டும். அந்த அறிவிப்புக்குப் பிறகு கள்ளர் நாடுகளின் அம்பலக்காரர்கள் அனைவரும் கலந்து கொள்கிற ஒரு விருந்து ஏற்பாடு. அதில் முக்கிய விருந்தினர்கள் மருதுபாண்டியர் இருவரும்! விருந்து நடைபெறும்போது விருந்து மண்டபத்தை வெள்ளைப் படை வளைக்கிறது. பெரிய மருதும் சின்ன மருதும் கைது செய்யப்படுகிறார்கள். எப்படி என் போர்த் தந்திரம்! இந்தத் தந்திரம் வெற்றி பெறத்தான் நீங்களிருவரும் துணைநிற்க வேண்டும்." வாளுக்குவேலிக்கு ஒரு அனல் மூச்சு! ஆதப்பன் இதயத் துடிப்புகள் இடியொலிகளாயின! சாம்ராஜ்யாதிபதி கள், குறுநில மன்னர்கள், பாளையக்காரர்கள் சரிந்துபோய் சரணாகதியடைந்து கிடக்கும் சூழ்நிலையில் நாடு என்று பெயர் பூண்ட ஒரு சில கிராமங்களின் அதிபர்களாக விளங்கும் அம்பலக்காரர்களால் ஆங்கிலேய ஆதிபத் யத்தின் வளர்ச்சியை எப்படித் தடுத்துவிட முடியும்? 'இந்த யோசனையை எனது நண்பர் பட்டமங்கலம் அம்பலக்காரர் வல்லத்தரையருக்குச் சொல்லியிருப் பீர்களே; அவரது பதில் என்னவோ?" வாளுக்கு வேலியின் கேள்விக்கு வெள்ளைக்காரத் துரைமகன் பெருஞ்சிரிப்புடன் பதில் கூறினான். "பட்டமங்கலத்தாருக்கு அவ்வளவு பக்குவம் போதாது! மருது பாண்டியரைக் காட்டிக் கொடுப்பதா? அதற்கு என் மனம் ஒப்பவே ஒப்பாது என்று மறுத்து விட்டார்!" கர்னல் துரையின் இந்தச் சொற்கள் காதில் விழுந்தவுடனே வாளுக்குவேலி, தன்னிருக்கையை