பக்கம்:தென்மொழி, சுவடி1 ஓலை10 நவம்பர் 1963.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தென்மொழி 27



அட்லாண்டிக் பெருங்கடல்.
இது பசிபிக் பெருங்கடலில் அரைப்பகுதியளவே உள்ளது. 31/2 கோடி கற்பரப்புடையது. ஆங்கில எழுத்தான S போன்ற வடிவமுள்ளது இக்கடல். இதன் ஆழம் 3 கற்கள். 55.000 கற்கள் கொண்ட நீண்ட கடற்கரை இதற்குண்டு. இதில் பெரும் மலைத்தொடர்கள், ஆழகான பள்ளத்தாக்குகள், சமவெளிகள் முதலியவை உள்ளன. தென் அட்லாண்டிக், வட அட்லாண்டிக்கை விடக் குளிர்ந்தது. இதன் நீர் உப்பு மிகுந்தது. பிற பெருங்கடல்களைவிட இக்கடலில் பல ஆறுகள் வந்து கலக்கின்றன. வாணிகத்திற்கு மிகவும் பயன்படும் பலவகை நீரோட்டங்கள் இதில் உள்ளன. இதில் நல்ல மீன் வளமும் இருப்பது போல், முத்துகளும், சிப்பிகளும் மிகுந்து இருக்கின்றன. இதில் உள்ள பயிர் வகைகள், மருந்துகள், நீரியற் கலவைப் பொருள்கள், உரங்கள் முதலிய பொருள்களாகப் பயன்படுகின்றன. அட்லாசு மலையும், அட்லாண்டிசு என்னும் நிலத்திட்டும் இக்கடலில் இருப்பதாலேயே இதற்கு அப்பெயர் வந்தது. வட கடல், பால்டிக் கடல், மையத் தரைக் கடல், மார்மோரா கடல், அட்சன் விரிகுடா, கரிபீயன் கடல் ஆகிய கடல்கள் இதன் துனைக்கடல்களாகும். இதில் மையத் தரைக்கடல் 2,300 கற்கள் நீளங் கொண்ட கடற்கரையை உடையதால் உலகிலேயே முதலான உள்நாட்டுக் கடலாக உள்ளது.
அட்லாண்டிக் கடலை முதன் முதலாகக் கடந்தவர் அமெரிக்காவைக் கண்டுபிடித்த கொலம்பசே ஆவார். இக்காலத்தில் இக்கடல் ஒரு பெரிய சிறந்த வாணிக வழியாகத் திகழ்கின்றது. செய்திப் போக்குவரத்திற்கும் பெரிய துணை புரிகின்றது. ஏறத்தாழ 3 இலக்கம் கற்கள் நீளமுள்ள கம்பிகள் செய்திப் போக்குவரத்திற்காக இக்கடலுள் கிடத்தப்பட்டுள்ளன. இரண்டாவது உலகப்போரின் போர்க்களமாகவும் இக்கடல் பயன்பட்டது. நூற்றுக் கணக்கான போர்க் கப்பல்களும், நீர் மூழ்கிக் கப்பல்களும் அக்கால் இதில் மூழ்கின. செருமானிக்கும், பிரிட்டனுக்கும் ஏற்பட்ட இக்கடும்போரின் விளைவாகவே வரலாற்றுச் சிறப்புடைய வட அட்லாண்டிக் ஒப்பந்தம் 1949-இல் ஏற்பட்டது. இவ்வொப்பந்தத்தைச் செய்து கொண்ட நாடுகள் நேடோ (Nato) நாடுகள் எனப்பட்டன. உலக அமைதி கருதி இவ்வொப்பத்தம் ஏற்பட்டது. அமெரிக்கா, பிரிட்டன், பிரான்சு, கனடா, நெதர்லாந்து, பெல்சியம், இலக்சம்பர்க், இத்தாலி, நார்வே, டென்மார்க், ஐசுலாந்து, போர்ச்சுக்கல், கிரீசு, துருக்கி, மேற்கு செருமானி ஆகிய நாடுகள் நேடோ நாடுகளாகும்.
அண்டார்க்டிக் பெருங்கடல்.
உலகின் தென்முனையைச் சுற்றி அமைந்தது இக்கடல். மிகவும் குறைவான ஆழமுடையது. பசிபிக் கடல், அட்லாண்