பக்கம்:தென்மொழி வரலாறு.djvu/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தென்மொழி வரலாறு . கூடிச் சுவர்க்கம் புகை வண்ணமும், செங்குட்டுவன் அவ் வதிசயங் கேட்டு அவட்குக் கோவில் கண்டு அவளுருப்ப திட்டை செய்து வழிபட்டவண்ணமும் பிறவும் கூறும். இக்கதை புகார்காண்டம், மதுரைக்காண்டம், வஞ்சிக் காண்டமென மூன்று வகைப் படுத்துக் கூறப்படும். இது சிலம்பை முக்கிய விடயமாகக் கொண்டெழுந்த காவியமா கலின், சிலப்பதிகார மெனப்பட்டது. இதன் புகார் காண்டம் மதுரைக் காண்டங்கட்கு நல்லுரை கண்டார் அடி யார்க்கு நல்லா ரென்பவர். அடியார்க்கு நல்லார் முத்தமி ழிலக்கண மரபுவழாது சொற்றிறம் பொருட்டிறம் விள் ங்கவுற்று நாடி யிதற்குரையுலகமுவப்ப வெழுதினார். (தி--பிகை ) மணிமேகலை. இது மதுரைக் கூலவாணிகன் சாத்தனாரியற்றிய வோர் பெளத்த காவியம். இக்காவியத் தலைவி மாதவி மகண் மணிமேகலை யாதலின் அப்பெயர்த்தாயிற்று. இது மணிமேகலை தந்தையாகிய கோவலற்குத் தாயாகிய கண் ணகிக்கு முந்தை யூழ்வினைப்பயன் விளைந்த முறைகேட்டு வைராக்கியமெய்தித் துறந்து தவத்திறம் பூண்டு புத்ததரு மங்கேட்டுப் பவத்திறமறுகென நோற்றதைப் பொருளாக வுடையது. இது விழாவறைகாதை, ஊரலருரைத்தகா தை, மலர்வனம் புக்க காதை, பளிக்கறை புக்க காதை, மணி மேகலா தெய்வம் வந்து தோன்றிய காதை, சக்கரவாளக் கோட்ட முரைத்த காதை, துயிலெழுப்பிய காதை, மணி பல்லவத்துத் துயருற்ற காதை, பீடிகை கண்டு பிறப் புணர்ந்த காதை , மந்திரங்கொடுத்த காதை, பாத்திரம் பெற்ற காதை , அறவணர்த்தொழுத காகை, ஆபுத்திரன் றிறமறிவித்த காதை, பாத்திர மரபு கூறிய காதை, பாத் திரங்கொண்டு பிச்சை புக்க காதை, ஆதிரை பிச்சை 12