பக்கம்:தென்மொழி வரலாறு.djvu/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தென்மொழி வரலாறு. 99 சுந்தரமூர்த்தி நாயனாரிடத்திலே விளங்கிய அற்புதங்கள் முதலை விழுங்கிய புதல்வனை அம்முதலையை அழைத்து உமிழச் செய்து பிழைப்பித்தது; நென்மலைபெற்றது; அம் பலையைப் பூதங்கள் வாரிப் போய்ப் பரவையார் வீட்டிலும் திருவாரூரிலுள்ளார் வீடுகள்தோறும் குவைசெய்யப்பெ ற்றது; தலைக்கணையாக அடுக்கிப் படுத்திருந்த செங்கற் கள் உதயத்திலே பொன்னாயிருக்கப் பெற்றது; மணிமுத் தா நதியிலேயிட்ட பொன்னைத் திருவாரூர்க் கமலாலயக் குளத்திலே யெடுத்தது முதலியனவாம். சுந்தரமூர்த்தி நாயனார் திருவாய் மலர்ந்தருளிய தே வாரப்பதிகங்கள் முப்பத்தேழா யிரம். அவற்றுள் மறைந் தனபோக எஞ்சி இக்காலத்தில் நிலைபெறுவன நூறு பதி கங்களாம். சுந்தரமூர்த்தி நாயனார் தடுத்தாட்கொள்ளப் பட்டபோது முதன் முதல் திருவாய் மலர்ந்தருளிய தே வாரம், "பித்தா பிறை சூடீ பெரு மானேயரு ளாளா- யெத்தான்மற வாதேநினைக்கின்றேன் மனத்துன்னை-வை த்தாய் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூரருட்டு றையுள் - அத்தாவுனக் காளாயினி யல்லேனென லாமே இத்தேவாரம் தம்மைத் தடுத்தாட்கொள்ள வந்த சிவபெரு மானை எதிர்த்து வாதாடியபோது அவரைப் பித்தாவென் று இகழ்ந்தனர்; பின்பு சிவபெருமானுடைய திருவருட் படியே பித்தாவென்று தொடங்கி அன்று முதலாகத் தலங்கடோறுஞ் சென்று, கடன் மடை திறந்தாலொப்பக் கேட்டாருள்ள நெக்கு நெக்குருகப், பாடியருளினார். இவருடைய திருப்பதிகங்களும் இசைத்தமிழேயாம். இவர் பாடிய பதிகங்களெல்லாம் பத்தாம்பாட்டிலே இவர் பெயரைக் குறிப்பனவாயும் அவ்வப் பதிகத்தா லெய்தப் படும் பயன் இதுவென்பதை வெளிப்படுத்துவனவாயும் இருக்கும். இம்மையில் தமக்குத் துன்பம் வந்தவிடத்தும்