பக்கம்:தென்மொழி வரலாறு.djvu/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 தென்மொழிவரலாறு. புலவர் தம்மருகே ராயன் மனைவி படுத்து நித்திரைபோத லைக்கண்டு துணுக்குற்று ராயனை நோக்கி என் செய்தாய்! என்செய் தாய்! என் றனர். ராயன் அவரை நோக்கி "அஞ் சாதீர், இப்போ தெழுந்திருக்க வேண்டாம், செல்லக் கிடமின் என்றான். மனை வி, அவ்வொலிகேட்டுப் பதைத் தெழுந் தோடி அந்தப்புரஞ் சென்றாள். ராயன் புலவரை நோக்கி என் மனையாளை மாத்திர மன்று உலகத்துப் பெண்க ளெல்லோரையும்மாதாவெனக் கொண்டு போற்றுகின்ற உம்பக்கத்திலே என் மனையாள் படுத்துறங்கியதைப் பெரும்பாக்கியமாகக் கொண்டேன் என்றான். அன்று முதலாகப் புலவரும் ராயனும் ஈருட லும் ஓருயிரும் போன்றொழுகினர். இவர் சீனக்கராயன் இறந்தபோது சோழன் தடுக்கவுங் கேளாமல் மேல் வருங் கவிகளைக் கூறி உடன் கட்டை யேறினார். வாழி சோழவென் வாய்மொழி கேண்மோ ஊழி நிலவெறி மாழிகை யின் வயிற் கட்டிளங் கணவன் கவின்பெறு சேக்கை என்றறி மனைவி நெடிது துயில் கொளச் செல்லக் கிடமி னெனக்கிடந் தருகெனைச் சொல்லிய நண்பன் றனிச்செல் பவனோ நா னு மேகுவ னற்றுணை யவற்கே. அன்று நீ செல்லக் கிட வென்றா பிழை போ டின்றுநீ வா னுலக மேறினாப் - மன்றல் கமழ் மானொக்கும் வேல் விழியார் மாரனே கண்டியூர்ச் சீநக்கா செல்லக் கிட இப்புலவர் பெருந் தகை யே தஞ்சைவாணன் கோவை யென்னும் பிரபந்தம் பாடியவர். அக்கோவையினது