128 தென்மொழிவரலாறு. கருதி அவரை நோக்கி நான் புதிதாகப்பாடும் கந்தரந் தாதிக்கு உரை சொல்லி முடிப்பீராயின் உமது கல்வித் திறமையை யொப்புக்கொள்வேன் என்றார். அதற்கு வில்லிபுத்தூராழ்வார் இசைதலும் அருணகிரிநாதர் ஒவ் வொரு செய்யுளாகப்பாடிப் போ யினர். அவரும் ஒவ் வொரு செய்யுளுக்கும் உரை சொல்லிப் போயினர். ஐம் பத்து நான் காஞ் செய்யுளாகிய, “திதத்தத் தத்தித் தத்தி” என்னுஞ் செய்யுளைப் பாடியபோது பொருள் சொல்ல மாட்டாது திகைத்து அவர் பாதங்களில் வீழ்ந்து நமஸ் கரித்தார். அருணகிரிநாதர் அவர் கா தைக்குடையாது அவரைப் பொறுத் து விடுத்தனர். அவ்வள வில் வில்லி புத்தூராழ்வார் கர் வபங்கம் அடைந்தவராய் அருணகிரி நாதரைத் துதித்துக்கொண்டு தமது ஊருக்கு மீண்டனர். இவர் பாடிய மகா பாரதத்தில் விநாயகருக்கு நாந்திச் செய் யுளாக முதலில் இரண்டு செய்யுள் கூறித் தற் சிறப்புப் பாயிரத்திலே “ஆக்குமா றயனாம் என் னுஞ் செய்யுளால் திரிமூர்த்திகளையும் அவர்களுக்கு மேலாகிய பரப்பிரமத் தையும் வணங்கி, அப்பாற் சருக்கங்கள்தோறும் திரு மாலுக்கும் வணக்கங் கூறியிருக்கின்றார். இவர் சமயத் தில் வைஷ்ணவரேயா யினும் சிவஸ்தோத்திரமாக அனேக செய்யுட்களை இடையிடையே பாடிப்போயிருக்கின்றனர். வில்லிபுத்தூரர் பாரதத்தில், வடமொழிப் பாரதத்தி லுள்ள முதற் பத் துப் பருவமே பாடப்பட்டன. மற்றை யெட்டுப் பருவங்களும் பாடப்படவில்லை. பாண்டவர் கள் முடி சூடிய சரித்திரம் வரையில் பாடி முடித்தனர். வில்லிபுத்தூரர் தாம்பாடிய பாரதத்தில் வடமொழிப் பதங்களை மிக எடுத் தாண்டிருக்கின்றார். புராதனாகம் வேதகீத புராண ரூபம், சலதரசஞ்சலசாலம், எனவும், மாதவயா தவ வாசவ கேசவ" எனவும் இவ்வாறே அனேக
பக்கம்:தென்மொழி வரலாறு.djvu/144
Appearance