பக்கம்:தென்மொழி வரலாறு.djvu/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரோடொருவர் தம்முட்பகைவராகத் தமிழ்நாட்டுச் சாந்த நிலையைக் கலக்குவாராயினர். அதன்பின்னர் துருக்க அர சரும் படையெடுத்து வந்து தமிழ்நாட்டைக்கலக்கு வாரா யினர். அவர் காலத்திலே அனேக இந்துஸ்தான் சொற்கள் தமிழோடு வந்து கலப்பனவாயின. அதன்பின்னர் கன்னட தேசத்தரசர் தமிழ்நாட்டிற்றலைமைபெற்றார்கள். அக்கா லத்தில் அனேக கன்னடச்சொற்களும் வந்து தமிழோடு கலந்தன. அக்காலத்திலே வரபதியாட்கொண்டானென் னும் தமிழரசன் நான் காஞ்சங்கந்தாபித்துத் தமிழை வளர்ப்பானாயினன். அச்சங்கத்திலேயே வில்லிபுத்தூரர் பாரதம் அரங்கேற்றப்பட்டது. இதனை எங்குமிவனிசைப்பிவரு நாளில் யாமுரைத் தவிர்ந்த நாட்டிற் (றோன்றி கொங்கர்குலவரபதியாட்கொண்டானென் றொருவண்மைக்குரிசி வெங்கலியின் மூழ்காமற்கருநடப்பேர் வெள்ளத்து விழாமனான்காஞ் சங்கமென முச்சங்கத் தண்டமிழ் நூல் கலங்காமற்றலைகண் டானே என்னும் பாரதச்செய்யுளாலும் உணர்க. அதன் பின்னர் தெலுங்க அரசர்கள் சில காலம் தலைமை பெற்றார்கள் . அவர் காலத்திலே அனேக தெலுங்குச்சொற்களும் வந்து கலப் பனவாயின. அதன் பின்னர் இற்றைக்கு நூற்றைம்பது வருஷங்களுக்கு முன்னர் தற்காலம் 01 மைஆளும். ஆங்கில அரசர்காலம் தொடங்கிற்று'. இவ் வ 1 சாடு சிற்சில ஆங் கில பதங்களும் வந்து கலப்பன வாயின. இது நிற்க. தமிழ்நாட்டிலே பன்னெடுங்காலமாக அநுஷ்டிக்கப் பட்டுவரும் சமயம் வைதிக சமயம். அதன் பின்னர் வேத பாகிய சமயங்களாகிய சமணசமயமும் பௌத்தசமயமும் வந்து புகுந்தன. அவையொருவாறு அருகிப்போக வைதிக சமயத்தில் ஒரு சாராராகிய வைஷ்ணவர்கள் தலை யெடுத்து வைஷ்ணவத்தைப் பரப்பினார்கள். சமயவாதிக ளால் இயற்றப்பட்ட தமிழ் நூல்கள் அனேகம். அவைக ளும் தமிழ் இலக்கியங்களைப்பெருக்குவனவாயின. தொடங்கிய காலவெல்லை காண்பதற்கரிதாய்ப்பன் னெடுங்காலமாக வழங்கிவரும் தமிழின து பூர்வ நிலையை