தென்மொழி வரலாறு. 149 மனம் ஒருவழிப்பட்டு இடையறாச் சிவத்தியானத்தில் நிற்கவில்லை'யே யென் றிரங்கிக் கூறும் விண்ணப்ப ரூபமா கிய பாடல்கள் கேட்போர் மனத் தைக் கவரும் இயல்பின. அச்செய்யுள் களிலொன்று வருமாறு:- கல்லேனு மையவொரு காலத்திலுருகுமென் கன் னெஞ்ச முருக விலையோ கருணைக்கிணங்காத வன்மையையும் நான்முகன் கற்பிக்கவொரு கடவுளோ வல்லான் வகுத்ததே வாய்க்கா லெனும் பெரு வழக்குக் கிழக்கு முண்டோ வானமாய் நின் றின்ப மழையா யிரங்கியெனை வாழ்விப்பதுன் பரங்காண் பொல்லாதசே யெளிற் றாய் தள்ள னீ தமோ புகலிடம் பிறிது முண்டோ பொய் வார்த்தை சொல்லிலோதிருவருட்கய லுமாய்ப் புன்மையே னாவனந்தோ சொல்லான் முழக்கிலோ சுகமில்லை மெளனியாய்ச் சுமமா விருக்க வருள் வாய் சுத்தநிர்க்குண மான பரதெய்வமே பரஞ் சோதியே சுகவாரியே. இவருடைய பாடல்கள் இக்காலத்தில் தமிழ்நாடெங்கும் தோத்திரப்பாவாக ஆலயங்களிலும் வீடுகளிலும் மடா லயங்களிலும் ஓதப்பட்டு வருகின்றன. சங்கீதகாலக்ஷே பங்களில் இவருடைய பாடல்கள் ஒன்றிரண்டாயினும் கேட்கப்படாமற் போவதில்லை. பக்தி ஞானங்களைச் சாமா னியரிடத்தும் வளர்க்கத்தக்க பாடல்கள் இவருடைய பாடல்களே.
பக்கம்:தென்மொழி வரலாறு.djvu/165
Appearance