பக்கம்:தென்மொழி வரலாறு.djvu/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180 தென்மொழி வரலாறு. அவற்றின் வழி ஒழுகப்புகுந்த நீங்கள், யாவர்களாகக் கொண்டு ஒழுகல் வேண்டும். இதனை நன்றாக ஆராய்ந்து அறிந்துகொள் ளுங்கள். சாதியினுஞ் சமயமே அதிகம். சமயத்தினுஞ் சாதி அதிக மெனக் கொள்வது சுருதி யுத்தி அனுபவமூன்றுக்கும் முழுமையு 6 விரோதம், உலகத்துச் சாதி பேதம்போலச் சற்சமயமாகிய சைவ சமயத்தினும் முதற்சாதி இரண்டாஞ்சாதி மூன்றாஞ்சாதி நாலாஞ் சாதி நீசசாதியெனச் சமயநடைபற்றி ஐந்து சாதி கொள்ளப்படும். சிவாகமத்தில் விதிக்கப்பட்ட நான்கு பாத முறைப்படி வழு வற நடந்து சிவானந்தப் பெரும் பேறு பெற்ற சீவன் முத் கர் சிவமே யாவர். இனிச் சிவஞானிகள் முதற் சாதி; சிவயோகிகள் இரண் டாஞ்சாதி; சிவக்கிரியாவான்கள் மூன்றாஞ்சாதி சிவாசாரியாவான்கள் நாலாஞ்சாதி; இந்நெறிகளில் வாராதவர்களும், இவர்களையும் இவர்கள் சாத்திர முதலியவற்றையும் நிந்திப்பவர்களும், இந்நெறி களிலே முறை பிறழ்ந்து நடக்கின்றவர்களும், இந்த நடைகளை விட்ட பதிதர்களும், சதாசூதகிகளாகிய பஞ்சம சாதி. சில சரியை கிரியை முதலியவைகளினாலே பொருள் தேடி உடம்பை வளர்ப்ப வர்களும், அப்பொருளைப் பாசத்தாருக்குக் கொடுத்து இன்புறு வோர்களும், கோயிலதிகாரிகளாய்த் தேவத்திரவியத்தைப் புசிப்ப வர்களும், விருத்திப்பொருட்டு ஆசாரியாபிஷேகம் முதலியன செய் துடையோர்களும், விருத்திப்பொருட்டுச் சிவவேடந் தரித்தவர் களும், விருத்திப்பொருட்டுத் துறவறம் பூண்டோர்களும், சிவஞான நூல்களைச் சொல்லிப் பொருள் வாங்கி வயிறு வளர்ப்பவர்களும் பிறரும் பதிதர்களுள் அடங்குவர்கள். சி. சி. 5. இங்கே சொல்லிய முறையன்றி, சிவபெருமான் ஆன்மாக் களுக்கு அருள் செய்யும் பொருட்டுத் தமக்குத் திருமேனியாகக் கொண்டருளிய குருலிங்க சங்கமமென்னும் மூன்றினிடத்தும் ஆசையும் பணியும் வழிபாடும் கொடையும் அடிமைத்திறமும் உரிமையுமுடையவர்கள் எந்தக் கருமஞ் செய்தாலும் முதற்சாதி யெனக் கொள்ளப்படுவர்கள். அத்துவசுத்தி செய்யப்பட்டுச் சிவ ஞான நூல்களாகிய சைவ சித்தாந்த சாத்திரங்களை ஓதி அவை களின் பொருளைக் கேட்டுச் சிந்தித்துத் தெளிந்த உயிரிலே சிவா