பக்கம்:தெப்போ-76.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 தெப்போ - 76 'நான் ஒட்ட ஆசைப்படறது உம்ம டொயோடா: கார் இல்லே. டெம்பிள் கார். அதாவது நம்ம ஊர்த் தேர் ஒண் ணு ஒட்டணும். இது வரைக்கும் அவ்வளவு பெரிய தேரை யாருமே பார்த்திருக்கக் கூடாது. திருவாரூர்த் தேரைவிடப் பெரிசா இருக்கணும்...”* 'திருவாரூர்த் தேர் மாதிரி ஜப்பான்லே ஒட்டிப் பார்க் கிறதா? என்னய்யா, தமாஷ் பண்றீரா? இதெல்லாம் நடக் கிற கதையா??? 'நடக்கிற கதையில்லே. ஒடுகிற கதை...?? * நல்ல ஐடியா வாத்தான் இருக்கு. ஆமாம்; அவ் வளவு பெரிய தேருக்கு நாம் எங்கே போவது? அதை யார் செய்து கொடுப்பாங்க? முதல்லே அதைப் பற்றி யெல்லாம் யோசித் தீரா??? ஜப்பான்லே, எக்ஸ்போ ஸெவண்ட்டி நடத்தி குங்க இல்லேயா? அதே மாதிரி இது தெப்போ - 76 ! தேரோடு ஒரு தெப்பம். அவ்வளவுதான் ?’ என்ருர் கோபால் ராவ். ரொம்ப விம்பிளாச் சொல்லிட்டீங்க நீங்க, எக்ஸ் போ - 70’ என்ருல் அதுக்கு எத்தனே வருஷம் எவ்வளவு பணம் செலவழிச்சாங்க தெரியுமா?’ என்று கேட்டான் பஞ்சு. - - 'இதுக்கு வேண்டியதெல்லாம் ஒரு தேர், ஒரு தெப் பம். அவ்வளவுதான். வேனுமால்ை முத்துப் பல்லக்கு ஒண்ணும் செஞ்சுடலாம். ஜப்பான்லே முத்துக்கு என்ன பஞ்சம்? கொட்டிக் கிடக்குமே! தரக்குறைவான முத்தெல் லாம் கடலிலே கொண்டு போய்க் கொட்டி விடுகிருர் களாமே! ? கோபால் ராவ்! உம்ம திட்டம் பிரமாதமாகத்தான் இருக்கு. இதுக்கெல்லாம் யாரய்யா பணம் செலவழிப் பாங்க? அதைச் சொல்லுங்க முதல்லே?" என்று கவலே. யோடு கேட்டான் பஞ்சு,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தெப்போ-76.pdf/11&oldid=924610" இலிருந்து மீள்விக்கப்பட்டது