பக்கம்:தெப்போ-76.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெப்போ - 76 If { 'மகாபலிபுரத்திலே இருக்கிற மாதிரியா??’ என்று கேட்டார் அம்மாஞ்சி வாத்தியார். இல்லை; இது வேறே மாதிரி. ரொம்பச் சின்னது. கவனிச்சுப் பார்த்தால்தான் தெரியும்?? என்ருன் பஞ்சு. 'நாம் கூட தெப்போ-76 விழா ஞாபகமாக "கீ செயின் ஒன்று செய்ய ஏற்பாடு செய்யலாம். சந்தன மரத்தில் சின்ன அளவில் தேர் செய்து அந்தக் கீ செயினில் இணைத்து, முக்கியமானவர்களுக்கெல்லாம் கொடுக்க லாமே? ? என்ருர் கோபால் ராவ். தேர் எவ்வளவு பெரிசு! அதைச் சந்தன மரத்தில் இத்தனூண்டு செய்து கொடுத்தால் நன்ருயிருக்குமா??? என்று கேட்டார் அம்மாஞ்சி. - 'பெரிதாக இருப்பதைச் சிறிதாகச் செய்து பார்ப்ப தில்தான் அழகு இருக்கு. பெரிய யானையைச் சின்ன சைஸில் செய்து பார்ப்பதிலும், சின்ன எறும்பைப் பெரிய சைஸில், செய்து பார்ப்பதிலும்தான் தமாஷே இருக்கு!?? என்ருர் கோபால் ராவ். அதுவும் நல்ல ஐடியாதான்?’ என்றர் அம்மாஞ்சி. ஜூலை பதினெட்டு என்ருல் நெருக்கத்தில் வந்து விட்டதே! இன்விடேஷன் போட வேண்டாமா?’ என்று கேட்டார் சாம்பசிவ சாஸ்திரி. 'ஓய்! இது ஜப்பான். எல்லாமே வேகத்திலே நடக் கும். நம்ம ஊர் பிரஸ் என்று நினைத்துவிட்டீரா??? என்று கேட்டார் ஜப்பான் சாஸ்திரி. 'அது சரி, வடம் பிடித்து இழுக்கப் போகிறவர்கள், முட்டுக்கட்டை போடப் போகிறவர்கள், கொடி காட்டப் போகிறவர்கள், வெடி வைக்கப் போகிறவர்கள், நாதசுரக் காரர்கள், ஒதுவார்கள், பந்தல்காரர்கள், யானைக்காரர் கள், தேர் ஜோடனைக்காரர்கள், சமையல்காரர்கள் இவ் வளவு பேரையும் க்ரூப் க்ருப்பாகப் பிரித்து ஒவ்வொரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தெப்போ-76.pdf/112&oldid=924613" இலிருந்து மீள்விக்கப்பட்டது