பக்கம்:தெப்போ-76.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

借3 பொழுது விடிந்தால் தேரோட்டம். கின் ஸ்ா வீதிகள் நான்கும் அமர்க்களப்பட்டுக் கொண்டிருந்தன. முதல் நாள் இரவே தேரோடப் போகும் அந்த நாலு த்ெருக்களி லும் வண்டிப் போக்குவரத்தைத் தடை செய்து விட்டிருந்த னர். டிபார்ட்மெண்ட் ஸ்டோர்களுக்கு விடுமுறை அளித்து விட்டனர். தெப்போ சின்னம்’ அணிந்த தொண்டர் களும் 1 Speak English என்ற எழுத்துக்களைச் சட்டையில் அணிந்திருந்த பெண் கய்டுகளும் தெருவெங்கும் உலாவிக் கொண்டிருந்தார்கள். ; * , மெயின் ஸ்ட்ரீட் முனையில் நிறுத்தப்பட்டிருந்த தேரைச் சுற்றிலும் பலத்த பந்தோபஸ்து போடப்பட்டிருந் தது. தொம்பைகள் கட்டி முடிந்தால் தேர் வேலே முழுதும் முடிந்த மாதிரிதான்! - 4. சிலர் தண்ணிர் இறைக்கும் மோட்டார் வண்டிகளைக் கொண்டு வந்து தெருவெங்கும் கழுவி விட்டு ஏற்கெனவே சுத்தமாயிருந்த வீதிகளே மேலும் சுத்தப்படுத்தி விட்டுப் போர்ைகள். அதைத் தொடர்ந்து சாந்தா நாராயணன் குழுவின்ர் இரவு முழுவதும் அந்த வீதிகளில் வண்ணக் கோலங்களைப் போட்டு முடித்தனர். - டெலிவிஷன்காரர்களுக்கும், வெளிநாட்டுப் பத்தி ரிகை போட்டோக்காரர்களுக்கும் வசதியாக அங்கங்கே இடங்களேத் தேர்ந்தெடுத்துக் கொண்டிருந்தார் யோஷி ரிை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தெப்போ-76.pdf/124&oldid=924626" இலிருந்து மீள்விக்கப்பட்டது