பக்கம்:தெப்போ-76.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 தெப்ப்ோ'- 76 வேடிக்கை, கொம்பு வாத்தியம், கொம்பு மிட்டாய், பொரி கடலே பட்டாணி, தண்ணிர்ப் பந்தல், நீர் மோர்...?? நீர் மோர்ன?’ என்று குறுக்கிட்டான் பஞ்சு.

  • More நீர்னு அர்த்தம்! என்ருர் ராவ்,

நம் ஊர் நீர் மோரெல்லாம் அங்கே கொண்டு போகக் கூடாது. ஜப்பான் தூய்மையான, துல்லியமான தேசம். அங்கே போய்த் தண்ணிர்ப் பந்தல் அது இது என்று வைத்து அசிங்கப்படுத்திவிடக் கூடாது?’ என்ருன் பஞ்சு. - திருவிழான்னு ஒரு தண்ணிர்ப் பந்தல் வேண் L_TLnfr?”や - - தண்ணிர்ப் பந்தல் என்ன? அவங்களிடம் சொன் ல்ை லன்ட்டோரி’ப் பந்தலே வைத்துக்கொடுப்பாங்க..?? ஸன்ட்டோரியா? அப்படின்ன??? அது ஜப்பான் தேசத்து ட்ரிங்க். ரொம்ப ஒஸ்தி. அதிலே கொஞ்சம் உள்ளே போனல் ஜப்பானே ஆடும்.?? பூகம்பத்திலேயா??? ஜப்பான் ஆடாது; நீர்தான் ஆடுவீர்! அது சரி; கொம்பு மிட்டாய்னு சொன்னிங்களே, அதென்ன?: ' என்று கேட்டான் பஞ்சு. - நீளமா கொம்பு நுனியிலே கலர் லே ஜவ் மிட்டாய். இருக்கும். ஒருத்தன் அந்தக் கொம்பைத் தோள் மீது சாய்த்துக்கொண்டு கிணுகினு’னு மணி அடிச்சிட்டே. போவான். சின்னப் பசங்களெல்லாம் அவனைச் சூழ்ந்து கிட்டு நிப்பாங்க. அவன் பைசா வாங்கிட்டு அந்தக் கொம்பு நுனியிலே உள்ள பாகுமிட்டாயை ரப்பர் மாதிரி இழுத்து வளைத்து அந்தப் பசங்க கையிலே ரிஸ்ட் வாட்ச் கட்டி விடுவான்...”*

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தெப்போ-76.pdf/13&oldid=924632" இலிருந்து மீள்விக்கப்பட்டது