பக்கம்:தெப்போ-76.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெப்போ - 76 13芷 எனக்குக் கிடைத்திருப்பதை எண்ணிப் பெரு மகிழ்ச்சி. அடைகிறேன். --- 'அடுத்தாற்போல் இங்கே இந்த விழாவைத் தொடங்கி வைக்க வந்துள்ள கலைஞர் கருணநிதி அவர்களேயும், திருவாரூரில் பல ஆண்டுகளாகத் தேரோட்டம் நடத்தி' வரும் திரு விடஸ்ை-டி- அவர்களேயும் வரவேற்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.?? பிறகு ஜப்பானியப் பிரதமர் தெப்போ-76- தபால் தலையை வெளியிட்டுப் பேசி முடிந்ததும் விழாவைத். தொடங்கி வைக்கும்படி கலைஞர் அவர்களைக் கேட்டுக். கொண்டார். கலைஞரின் வலது தோளில் போட்டிருந்த நீண்ட அங்க வஸ்திரம் முதுகுப் பக்கமாகப் போய் இடது கை மணிக் கட்டு வழியாக மேலே வந்து இடது கையில் முடிந்திருப் பதை சக்கரவர்த்தி அவர்கள் சற்று நேரம் கண் கொட்டா மல் பார்த்துக் கொண்டிருந்தார். -

  • தமிழ் நாட்டில் எல்லோரும் இப்படித்தான் அங்க வஸ்திரம் போடுவார்களா?’ என்று அவர் பஞ்சுவைப் பார்த்துக் கேட்டார்.

'இல்லை; ஒவ்வொருத்தர் ஒவ்வொரு மாதிரி. வள்ளுவர் ஒரு ஸ்டைல், வ. உ. சி. ஒரு ஸ்டைல். காமராஜ், ராஜாஜி ஒவ்வொருத்தரும் ஒரு ஸ்டைல்’’ என்ருன் பஞ்சு. கலைஞர் இனிய தமிழில் எழுதி வைத்திருந்த சொற். பொழிவை எடுத்துப் படிக்கத் தொடங்கினர்: ' 'திருவாரூரில் நெடுநாட்கள் ஒடாமலிருந்த தேரை, ஓட்டத் தொடங்கிய போது அந்த விழா நிகழ்ச்சிக்கு. என்ன வந்து கலந்து கொள்ளுமாறு வலியுறுத்தி அழைத். தார்கள். நான் அழைப்பை ஏற்றுக் கொள்ள இயலாத, நிலையில் இருப்பதாக அறிவித்து விட்டேன். ஆனால் இப்: போது ஜப்பானில் நடைபெறுகிற தேரோட்ட விழாவுக்கு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தெப்போ-76.pdf/131&oldid=924634" இலிருந்து மீள்விக்கப்பட்டது