பக்கம்:தெப்போ-76.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 தெப்ப்ோ-76 போட்டு, பரதம்-இப்படி அனைத்துச் சிறப்பையும் வெளிநாடு களுக்கு எடுத்துச் செல்லுங்கள்! ஆல்ை ஒன்று-காவடி மட்டும் எங்கேயும் எடுத்துச் செல்ல வேண்டாம்! அதை வெளிநாட்டார் வேண்டுமானல் இங்கு வந்து.பார்த்து மகிழட்டும் என்று கூறி இந்தக் கற்பனைத் தேரை, கற்பன் விதிகளில், கற்பனையாக ஓடவிடும் கற்பனை விழாவை, கற்பனையாகத் தொடங்கி வைத்து, கற்பனையாக விடை பெற்றுக்கொள்கிறேன்! வாழ்க கற்ப்னைச் சுரங்கம் சாவி: கலைஞர் உரை முடிந்தபோது எழுந்த கர ஒலி வானுல கில் உள்ள வள்ளுவர் காதுக்கே எட்டியிருக்கும். நிகழ்ச்சி கள் முடிந்த உடன் திரு வி. எஸ். டி. அவர்கள் எல்லோ ரையும் தேரடிக்கு அழைத்துச் சென்ருர். - - - அங்கே சாஸ்திரிகள் மூவரும் தேங்காய் உடைத்து, கற்பூரம் கொளுத்தித் தேருக்குப் பூஜை செய்தார்கள். அது முடிந்ததும், வி. எஸ். டி. முக்கியமானவர்களே ஒவ்வொரு வராக அழைத்து ஆளுக்கொரு தேங்காயைக் கையில் கொடுத்து சக்கரத்தின் மீது சூரைக்காய் உடைக்கச் சொன்னர். -

  • முதலில் நீங்க உடையுங்க. அதைப் பார்த்து சக்கர வர்த்தியும் உடைப்பார். அப்புறம் எல்லோரும் உடைப் பார்கள்?’ என்ருன் பஞ்சு. -

அப்படியே, முதல் சூரைக்காயை திரு வி. எஸ். டி. உடைத்துக் காட்டினர். தொடர்ந்து சக்கரவர்த்தியும், அவரது குடும்பத்தினரும், பிரதம மந்திரியும் மற்றவர்களும் -ஒருவர்பின் ஒருவராய் வந்து உடைத்துத் தீர்த்தார்கள். அம்மாஞ்சி ஓடிப்போய் வெள்ளைப் பூசனிக்காய்களே எடுத்து வந்து நாலு சக்கரங்களுக்கும் அடியில் திணித்தார். அந்தக் காய்களை எதற்கு சக்கரத்தின் அடியில் வைக்கிருர்கள்?’ என்று கேட்டார். சக்கரவர்த்தி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தெப்போ-76.pdf/134&oldid=924637" இலிருந்து மீள்விக்கப்பட்டது