பக்கம்:தெப்போ-76.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 தெப்போ - 76). வற்றையும் கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டே போளுர், இத்தனை பாலங்களுக்கும், ஃப்ளே ஓவர்களுக்கும். இடையில் எப்படித் தேர் விடப்போகிருேம்? இதெல்லாம். தடுக்காதா?’ என்று கேட்டார் ஜப்பான் சாஸ்திரி. 'இந்தப் பாலங்களே யெல்லாம் பார்க்கும்போது எனக்கு நம் ஊர் பன்னிர்தாஸ் சகோதரர்கள் ஞாபகம், தான் வருகிறது!’ என்ருர் குள்ள சாஸ்திரி. و و grer P » ، 'ஒரு பாலம் பாக்கி விடாமல் அவர்கள் பெயரை எழுதி வைத்து விடுவார்களே !?? என்ருர் குள்ள சாஸ்திரி. 'இன்று மாலேயே டோக்கியோ டவர்மீது ஏறி ஒரு. ஏரியல் ஸர்வே நடத்தி விடலாம். அப்போதுதான் டோக்கியோ பற்றி நமக்கு ஒரு ஐடியா கிடைக்கும்?” என்ருர் கோபால் ராவ். - - 'மாலை ஐந்து மணிக்கு மேல் போனல் பகல் வெளிச் சத்திலும் ஊரைப் பார்க்கலாம். இரவு மின்சார விளக்கு, களின் வண்ண ஜாலக் கண் சிமிட்டுகளேயும் காணலாம்: ' என்ருன் பஞ்சு, ' க்யோபாஷி, நிஹோம்பாஷி, இடோபாஷி, விம் பாஷி’’ என்று முணுமுணுத்துக் கொண்டிருந்தார் ஜப்பான் சாஸ்திரி. - என்ன அது, பாஷி பாஷின்னு ஜபிக்கிறீங்க? என்ன மந்த்ரம் அது?’ என்று கேட்டார் அம்மாஞ்சி. 'பாவின்கு பிரிட்ஜ் என்று பெயர். ஜப்பான்லே தொட்ட இடமெல்லாம் பிரிட்ஜ் தான்’ என்ருர் கோபால் ராவ். 'இத்தனையூண்டு மீன் குஞ்சு மாதிரி சின்னஞ்சிறு தேசம். முப்பதே வருஷத்திலே என்னமாய் வளர்ந்துட்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தெப்போ-76.pdf/25&oldid=924676" இலிருந்து மீள்விக்கப்பட்டது